/* up Facebook

Jun 15, 2013

கடைசி பக்க கதாநாயகி


போராளிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்� என்ற புகழ்பெற்ற முதுமொழியை நம்புவதாக இருந்தால், வல்சா ஜானும் விதைக்கப்பட்டிருக்கிறார். சிஸ்டர், டீச்சர் என அழைக்கப்படுவதைவிட �பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட போராளி� என அழைக்கப்படுவதையே அவர் விரும்பினார். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் வல்சா ஜான். இறைபணி செய்வதற்காக திருச்சபையில் சேர்ந்த அவருக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர் மக்களின் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமல், வெறுமனே �ஏ ஃபார் ஆப்பிள்� சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக காலம்முழுக்க இருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. முழுக்க முழுக்க பழங்குடிகள் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் கனிமவளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுரங்கம் அமைத்து அவற்றை வெட்டி எடுத்து காசு பண்ண வரும் நிறுவனங்கள், இந்தப் பழங்குடியினரை ஏமாற்றி அவர்களின் நிலங்களையும் வாழ்விடங்களையும் அபகரிப்பதைப் பார்த்து வல்சா கொதித்தார்.

�பிள்ளைகளுக்கு இல்லை... அவர்களைப் பெற்றவர்களுக்கே முதலில் கல்வி போதிக்க வேண்டியிருக்கிறது� என்பதைப் புரிந்துகொண்டார். கான்வென்ட் என்ற பாதுகாப்பு வளையத்தில் இருந்தபடி செய்யும் ஆசிரியைப் பணியைத் துறந்து, மக்களோடு போய் தங்கினார். ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டம் பச்வாரா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். சந்தால் பழங்குடி மக்களின் மொழியைக் கற்றார். நிலக்கரி சுரங்கம் அமைக்க அந்தப் பகுதியில் பல கிராமங்கள் காலிசெய்யப்படும் நிலை வந்தபோது, �ராஜ்மஹால் பஹத் பச்சாவோ அந்தோலன்� என்ற அமைப்பை உருவாக்கி போராடினார். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு போட்டார். இதனால் அவர் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் நிலை வந்தது. திருச்சபையினரும், அவரது குடும்பத்தினரும் அவரை திரும்பவும் கேரளாவுக்கே வரச் சொன்னார்கள். நல்ல சம்பளத்தில் ஒரு வேலைவாய்ப்பும் வந்தது. ஆனால், �வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக போராடுவதே உண்மையான இறைபணி� என்று சொல்லி, அதையெல்லாம் நிராகரித்தார். 

அவரது போராட்டத்தின் விளைவாக, சுரங்கம் அமைக்க வந்த தனியார் நிறுவனம் இறங்கி வந்தது. நிலங்களை இழந்தவர்களுக்கு நிவாரணம், மாற்று இடத்தில் நிலம், வேலைவாய்ப்பு, மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எல்லாம் கிடைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குமுன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. பழங்குடி மக்களுக்கு மாற்றுமுறை விவசாயத்தைக் கற்றுத் தந்து, அவர்களின் வாழ்வு வளம்பெற வழிகாட்டினார். பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்காக சுரங்க நிறுவனம் அமைத்துத் தந்த பள்ளிக்கூடத்தை அவரே நிர்வகித்து, நல்ல கல்வியைத் தர முற்பட்டார்.
ஜார்கண்ட் முழுக்க புதிய சுரங்கங்கள் அமையும் இடங்களில் எல்லாம் இந்த விஷயம் பரவியது பலர் கண்களை உறுத்தியது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த 15ம் தேதி இரவு வல்சா ஜான் படுகொலை செய்யப்பட்டார். அவரது கைகளைக் கொண்டே அவர் கண்ணைக் குத்தும்விதமாக, பழங்குடி மக்களில் சிலரையே தூண்டிவிட்டு கொன்றிருக்கிறார்கள்.

53 வயதில் படுகொலை செய்யப்பட்ட வல்சா ஜான், தனது 20 ஆண்டுகளை பழங்குடியினர் வளர்ச்சிக்காக இழந்தவர்; கடைசியாக உயிரையும்! உரிமைகளை இழப்பவர்களுக்கு உதவிகள் செய்வதுதான், அவரது மரணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்