/* up Facebook

May 1, 2013

பெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்


இன்று உலகளாவிய ரீதியில் இனமதமொழிப் பிரச்சினைகள் எவ்வளவுக்கெவ்வளவு மலிந்துள்ளதோ அதைவிட ஒரு படி மேலாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்த வன்முறைகள் வயது வேறுபாடின்றி பரவலாக இடம்பெறுகின்ற அதேவேளை முன்னரைப் போன்று “இனந்தெரியாதோர் “ என்ற நிலை மாறி தந்தை.சகோதரன் நண்பர்கள்உறவினர்கள் என கூட இருப்பவர்களே பெண்களை வல்லுறவிற்கு உட்படுத்தும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு நிகழ்த்தப்படுகின்ற பாலியல் வல்லுறவுகள் பலவகையாக பிரிக்கப்படுகின்றன. இவை தொடர்பான விளக்கங்களை அறிந்து கொள்வது முன்னெச்சரிக்கைகளாக அமைவதுடன் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும். 

1. உறவுள்ள போதும் சம்மதமின்றிய நிலையில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தல்.

பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவகாரத்துப் பெற்று சட்டப்படி பிரிந்து விட்ட நிலையில் கணவன் பிரிந்துவிட்ட தன் மனைவியுடன் உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.

2. பலவந்தமான சம்மதத்தினை பெற்று மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறை 
சட்ட அல்லது சட்டபூர்வமற்ற முறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போது கொலை மிரட்டல் அச்சுறுத்தல் போன்றவற்றினூடாக பெண்ணொருவரின் சம்மதத்தினை பலவந்தமாக பெற்று மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு

3. சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் 
குறித்த பெண்ணொருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அல்லது அறியாத நிலையில் கொடுக்கப்பட்ட போதைபொருளின் மயக்கநிலையில் இருக்கும் போது அத் தெளிவற்ற சந்தர்ப்பங்களின் போதான நிலையில் பெறப்பட்ட சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள்

4. நம்பிக்கை அடிப்படையிலான பாலியல் வல்லுறவுகள் 
ஒரு நபர் தனக்கு சட்டபூர்வமான தொடர்பற்றவர் என்ற நிலையிலும் எதிர்காலத்தில் தன்னை திருமணம் செய்வார் என்ற நம்பிக்கை அடிப்படையில் சம்மதித்து பின்னர் ஏமாற்றப்படுவாராயின் அதுவும் பாலியல் வன்முறையாக கணிக்கப்படும்.

5. வயதெல்லைக்கு கீழ்ப்பட்டவர்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் 
குறித்த வயதெல்லைக்கு கீழ்ப்பட்ட பெண்ணொருவரிடமிருந்து பெறப்பட்ட சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவுகள் வன்முறையாக கணிக்கப்படும்.

உதவி – பெண்கள் ஆராய்ச்சி நிலையம்

1 comments:

manivannan mani said...

மிக அருமையான பதிவு

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்