/* up Facebook

Apr 19, 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவரை இழந்தோர் தொகை 24,000


மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவரை இழந்தோர் தொகை 24,000 ஆகவும், பெற்றோர்களை இழந்த அனாதரவு சிறுவர்களின் எண்ணிக்கை 16,000ஆகவும் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அறிவித்திருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முயற்சியாளர்களின் உற்பத்தி எனும் கருப்பொருளில் இடம்பெற்ற கண்காட்சியை தொடக்கி அவர் ஆற்றிய உரையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் மட்டும் கணவரை இழந்த பெண்களின் தொகை என்றும் அறியக்கிடைக்கிறது.

இதுவரை 140,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரோ அல்லது அதற்கு மேலதிகமாகவோ இழந்திருக்கின்றனர் என லங்கா நியுஸ் செய்திகள் தெரிவிக்கிறது. பல்வேறுபட்ட அங்கங்களை இழந்த மற்றும் பலவீனமுற்றோர் தொகை, மன நிலை பாதிக்கப்பட்டோர் தொகையும் அதிகமானவை என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழில் - சுதா

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்