/* up Facebook

Mar 9, 2013

பாலியல் வல்லுறவுக்கு எதிரான வீதி உலா....



பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வல்லுறவு மற்றும் கொடுமைகளை நிறுத்த வேண்டும் எனக் கோரி கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்;டு, வீதி நாடகம், சுலோக அட்டைகளைத் தாங்கிய துவிச்சக்கர வண்டிகள், நடனம் மற்றும் பாடல்களுடன் பாலியல் வல்லுறவுக்கெதிரான வீதி உலாவில் பல நூற்றுகணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர்.

'உறுதிப்பாடு என்பது உறுதிப்பாடேயாகும், பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுறுத்த செயல்படும் நேரமிது" என்ற ஐ.நா.வின் தொனிப்பொருளிலான இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஊதா மற்றும் கறுப்பு நிறங்களிலான நிறப்பூச்சுகளை தமது முகங்களில் பூசிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.






0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்