/* up Facebook

Jul 14, 2013

டெல்லியில் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

மார்ச் 8  - சர்வதேச பெண்கள் தினம் - 2013

சர்வதேச பெண்கள் தினவிழாவில் ஒபாமா மனைவி வழங்குகிறார்

டெல்லியில் கடந்த டிசம்பர் 16-ந்தேதி 23 வயதான பிசியோதெரபி மருத்துவக்கல்வி மாணவி ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ந்தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் லட்சக்கணக்கான இந்திய பெண்களும், மாணவர்களும் போராடினார்கள். இந்த நிலையில் அந்த மாணவி உள்பட உலக அளவில் 10 பெண்களுக்கு சர்வதேச வீரமங்கை விருதுகள் வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது.

அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

டெல்லியில் 6 பேரால் கற்பழிக்கப்பட்டு படுகாயம் அடைந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது 2 முறை துணிவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தன்னை தாக்கியவர்களுக்கு எதிராக நீதி வழங்கப்பட வேண்டும், அந்த நீதியை காண தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று 2 முறையும் கூறியிருந்தார். அவரது துணிச்சல் மிக்க போராட்டத்தால் பல இந்தியர்கள் கவரப்பட்டனர்.

அவரது மரணம் இந்திய சமுதாயத்திடம் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், அதற்காக புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும், கற்பழிப்புக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. இந்திய அரசு அந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளுக்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

'சர்வதேச வீர மங்கை' விருது ஆண்டுதோறும் உலக அளவில் பெண்கள் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனிப்பட்ட முறையில் கடுமையாக போராடும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் பல்வேறு நாடுகளை சேர்ந்த 67 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான வன்முறைக்கு எதிராக போராட மக்களை தூண்டியதற்காக டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட 23 வயது மாணவிக்கு 'சர்வதேச வீரமங்கை' என்ற விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்செல் மற்றும் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆகியோர் இந்த விருதை சர்வதேச மகளிர் தினமான 8-ந் தேதி வழங்குகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மாணவியின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த விருதுக்கு அவள் மிகவும் பொருத்தமானவள். அவளது தைரியம் மற்றும் துணிச்சலுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அந்த பெண்ணின் சகோதரர் கூறினார்.

நன்றி - மாலை மலர்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்