/* up Facebook

Mar 4, 2013

சீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள் குறித்த தரவுகள்



ராமதாஸ் போன்றோர் முகத்தில் அறையும் RTI தகவல் :

தலித் மக்கள் பற்றி ஆதாரமற்ற குற்றசாட்டுகளை தொடுத்து வரும் ராமதாசின் முகத்தில் அறைகிறது இந்த தகவல். இன்றைய Deccan Chronicle இல் வந்திருக்கும் செய்தி அது. சாதி மறுத்து திருமணம் செய்த பெண்களுக்கேதிரான கொடுமைகள், திருமண ஆசை காட்டி சீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த செய்தி அது. RTI மூலம் 2009 முதல் 2012 வரையிக்குமான தரவுகள் கிடைத்திருக்கின்றன. 

* குறிப்பிட்ட காலத்தில் பதியப்பட்ட 84 வழக்குகளில் 67 வழக்குகலில் தலித் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலித் அல்லாதவர்கள் 

* மீதமுள்ள 17 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தலித் அல்லாத பெண்களாய் இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் பெரும்பாலும் தலித் அல்லாத ஆண்கள்ளே .

* அதில் 52 தலித் பெண்கள் திருமண செய்வதாக சொல்லி பிற சமூகத்துக்கு ஆண்களால் ஏமாற்றப்பட்டவர்கள்.

*மொத்தத்தில் இம்மாதிரியான வழக்குகளில் 95.2 % தவறு தவறு செய்தவர்கள் தலித் அல்லாத ஆண்களே.

*சமூகத்தில் 20 % தலித்கள் இருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 80 % தலித் பெண்கள்.

* சமூகத்தில் 80 % தலித் அல்லாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குற்றம் செய்தவர்களில் 95.2 % தலித் அல்லாதவர்கள்.

இது பற்றிய மேலதி கா விபரங்களை Daccan chronicle காணலாம்.

மேலும் தி ஹிந்து வெளியிட்டிருக்கிற இந்த ஆய்வின் மேலதிகா விபரங்களின் படி கீழ்வருமாறு சாரம்சப்படுத்துகிறது.


காதலித்துக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பின் கைவிடப்பட்ட, ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தருமபுரி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமனாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 17 மாவட்டங்களில் மொத்தம் 84 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2009 ஜனவரி முதல் 2012 டிசம்பர் வரையில் காலகட்டத்தில் நடந்த கலப்புத் திருமணங்கள் தொடர்பான இந்த ஆய்வு முடிவின்படி-

67 தலித் பெண்கள் (பறையர் 32, பள்ளர் 20, அருந்ததியர் 13, இதர தலித் சமூகத்தினர் 2 பேர்) - அதாவது 80 சதவீதம் பேர் மற்ற சாதிகளைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு வன்முறைகளுக்கும், புகுந்தவீட்டாரின் அவமதிப்புகளுக்கும், கணவனின் புறக்கணிப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இவர்களில் சிலர், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளிக்கப்பட்டதை நம்பி பாலியல் உறவுக்கு உடன்பட்டு ஏமாந்தவர்கள்.

தலித் அல்லாத பெண்கள் 17 (வன்னியர் 3, நாடார் 2, முதலியார் 2, கவுண்டர், பிரன்மலைக் கள்ளர், நாயுடு சமூகங்களிலிருந்து ஒவ்வொருவர்) பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காதல் திருமணத்திற்குப் பின் குடும்ப வன்முறைகளுக்கும், அவமதிப்புகளுக்கும் உள்ளானவர்களான இவர்கள் அனைவருமே தேர்வு செய்த ஆண்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாகக் கிடைக்கவில்லை.

ஆய்வினை நடத்திய மதுரையைச் சேர்ந்த ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பு, தலித் பெண்களை ஏமாற்றியவர்கள் மீது, அவர்கள் எளிதில் ஜாமீன் அனுமதி பெற வழியின்றி எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.


முகநூல் வழியாக பெற்று தொகுத்தது - நன்றி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்