/* up Facebook

Nov 26, 2011

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது!



பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 இல் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள். ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாக பிரகடப்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றதைப் போலவே இலங்கையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பம், அரசு, மற்றும் இராணுவம் என வன்முறையின் பரப்பு அகன்று விரிந்துள்ளது. பெண்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் அரசியல், இராணுவ கொடூரங்களை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்வுகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்கத் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

2009 ஆண்டின் கணக்கெடுப்பில் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 3366 முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவற்றுள் பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

1 comments:

தமிழானவன் said...

மிராபல் சகொதரிகள் பற்றிய சில செய்திகள் http://thamizvinai.blogspot.com/2010/11/blog-post_25.html

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்