/* up Facebook

Nov 26, 2011

பெண்களுக்கு கசையடி வழங்கும் தண்டனையை நிறுத்த வேண்டும்- நவநீதம்பிள்ளை !


திருமணத்திற்கு புறம்பாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களை அவமரியாதைப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு சவுக்கால் அடிக்கும் தண்டனை கொடுப்பதை முடிவுக்கு கொண்டு வரும்படி ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மாலைதீவு அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

நேற்று மாலைதீவு பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில் அவர் இதனைத்தெரிவித்தார்.

‘ இந்த தண்டனை பெண்களுக்கு எதிரானதும் பெண்களை மிக மோசமாக அவமானப்படுத்தும் மனிதத்தன்மையற்ற வன்செயலாகும். இது ஜனநாயக நாடு ஒன்றின் சட்டவரைவுக்குள் இடம்பெறக்கூடாது’ என்றும் நவநீதம்பின்னை தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பாரப்பட்சங்களை நீக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் மிகவும் கவலையளிக்கும் இத்தண்டனை தொடர்பாக மாலைதீவில் பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றி மாலைதீவு அதிகாரிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சோரம் போன குற்றத்திற்காக 30 சவுக்கடிகள் பெண்ணுக்கு சட்டப்படி வழங்கப்பட்டு வருகின்றது. தண்டனை பகிரங்கமாக வழங்கப்பட்டு வருகின்றது எனினும் எத்தனை பேருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நீதிமன்றம் வெளியிடவில்லை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்