/* up Facebook

Nov 11, 2011

இலங்கை அரசு மற்றும் தமிழ்ப் பெண்கள்-தில்லை


தேசிய அரசுகள் அவர்களது முறைசாரா இராணுவங்களின் பெருக்கம் போர் இயற்கையை மாற்றியதோடு மோதல் பகுதிகளில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியது. சர்வதேச சட்டங்களின் நவீன புரிதலின்மை காரணமாக பல தசாப்தங்களாக நீண்ட இன மோதலில் பெண்கள் முதல் குழந்தைகள் வரை எளிதாகப் பாதிக்கப்பட்டனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த பெண்கள் விடயத்தில் ஆரம்பம் முதல் இராணுவத்தின் வன்முறைகள் மேலோங்கி இருந்தது. பொது அரங்கில் பெண்கள் அதிகம் வெளியே வராதிருந்த போதும் இராணுவத்தினரின் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சமூகத்தில் பெண்களின் பாரம்பரியமான பாத்திரங்களை மாற்றின.

பெண்கள் அவர்களது கணவர்கள், தந்தைகள் மற்றும் மகன்கள் காணாமல் போனபோது என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க எந்த மூல உபாயமும் இன்றித் தவித்ததோடு நாளுக்கு நாள் உயிர் பிரச்சினைகள் ,பெண்களுக்கான பாதுகாப்பு, வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின.

காணாமல் போன உறவினர்கள் குறித்து இடம்பெயர்ந்த பெண்கள் நீதிக்கான முறையீடுகள் செய்ய நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போகமுடியாதவாறு எதிர்ப்பும் , துன்புறுத்தல்களும் ஓட்டுக்குளுக்களாலும் மற்றும் ஆயுதப்படைகளாலும் இருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பெண்கள் தங்கள் கணவர்கள், மகன்கள் அல்லது தந்தையார் காணாமல் போனபோது செய்வதறியாது தவித்தனர் .
உறவினர்களின் இழப்பு குடும்ப பாத்திரங்களில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தின கூடுதலாக ஆண்கள் இல்லாத குடும்ப பெண்கள் இராணுவத்தினரின் வன்முறைகளில் சிக்கித்தவித்தனர் தீவிர மோதல் இடம்பெற்ற பகுதிகளில் துணை இராணுவ குழுக்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆயுத படைகளின் உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உட்பட சித்திரவதைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இன பாகுபாடே இலங்கை மோதலுக்கு ஒரு காரணமாக மேற்கோளிடப்பட்ட போதும் குறிப்பாகத் தமிழ் பெண்கள் வன்முறை இராணுவத்னத்தினரின் அதிக துன்புறுத்தல்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆளாகினர்.

புலிகளின் தாக்குதல்களில் பெண் மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டதால் தமிழ் பெண்கள் பெரும்பாலும் கடுமையான பாதுகாப்பு சோதனைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் காவல்துறை மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளின் இலக்குகளாக இருந்தனர். தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் பாதுகாப்பு சோதனை சாவடிகள், பாதுகாப்பு படைகளின் திடீர் சுற்றிவளைப்புகள், சீரற்ற இரவு நேர சோதனைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாயிற்று.

தமிழ் பெண்கள் அதிகம் கைது செய்யப்பட்டு பொலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகளின் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் சித்திரவதை மற்றும் பலர் உட்காயங்களுக்கும் உள்ளாகினர். இலங்கை பாதுகாப்பு படையினரால் பெரும்பாலான பெண்கள் அவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப் பட்டனர்.

தடுப்பு முகாங்களில் தமிழ் பெண்களுக்கு எதிராக இராணுவத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் வன்முறைகள் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இலங்கையின் பெரும்பான்மையின பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் தெளிவாக இன பாகுபாட்டின் எதிர்ப்புணர்வால் அரங்கேறியது.

தமிழ் பெண்களுக்கு எதிரான ஆயுத படைகளின் பாலியல் வன்முறைகளின் உண்மையான ஒரு சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த போதிலும் அதை விட நிகழ்வுகள் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது.
குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் கொலை வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது .

இலங்கையில் ஆயுதப்படையினரிடம் பாலியல் உணர்திறன் பரவலாக இல்லாததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மேலும் அதிகரித்தன. பயம் மற்றும் அவமானம் பெண்களின் வளர்ச்சியைத் தடுத்தது. அரச நீதித்துறை மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொடுத்த அறிக்கைகள் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கவில்லை. தண்டனைகளிலிருந்து அவர்கள் தப்பிக்கொள்ள அது வழிசெய்தது.

தமிழ் பெண்களுக்கு அடிக்கடி விசாரணைகள் அல்லது சோதனைகளின் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இன்றும் அரசாங்க படைகளால் அரங்கேறுகிறது.

இரண்டு வருடத்திற்கும் மேலாக அரசின் தடுப்பு முகாங்களில் இருக்கும் பெண் போராளிகளின் பாதுகாப்பு குறித்த பேரதிர்ச்சி இன்னும் தொடர்கிறது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழும் அப்பட்டமாக அரசின் பொய்யான சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்ட சாதாரண பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு எதிரான பொய் வழக்குகள் இதுவரை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. யுத்தம் முடிந்து விட்டதாக ஏக்காளம் இடும் அரசு ஏன் அவர்களை வெளியில் விடத்தயங்குகிறது. .

மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில் மிகச் சிறந்த இராணுவ கட்டமைப்பை கொண்டிருக்கும் இலங்கை அரசு படையினரின் காட்டுமிரண்டித்தனங்களுக்கு தொடர்ந்தும் தனது கௌரவங்களை வழங்குவதை யுத்த காலங்களிலும் சரி இன்றும் சரி நிறுத்துவதாக இல்லை. குற்றவாளிகளுக்கே சிறந்த நற்சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கிறது.

யுத்த காலங்களில் பாதுகாப்பு படையினரின் கைகளில் வன்முறை பெரிகியதைப் போலவே ஒட்டுக்குழுக்களும் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களை அச்சுறுத்தினர். பாலியல் வன்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அவமான உணர்வுகளை குறிப்பாக வடக்கு கிழக்கு பெண்கள் அவர்களால் அனுபவித்தனர். பெண்களுக்கு விருப்பமற்ற சமூக நடவடிக்கைகளில் அவ்வாறான குழுக்கள் ஈடுபட்டதோடு கைது மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தல், கப்பம் பெறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இவர்களின் இந்த நடவடிக்கைகள் பலமுறை மனித உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டது;

இலங்கை இராணுவத்தின் மிருகத்தனமான மற்றும் மனிதத்தன்மையற்ற தமிழினப் படுகொலைகள் உலக அரங்கில் விவரிக்கப்படுகிறது. அதே போன்று மனித நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டாக இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தினர் குறிப்பாகத் தமிழ் பெண்களின் உடல்களில் இழைத்திருக்கும் ஒழுக்கமற்ற கொடூரங்களையும் விவரணப்படுத்த வேண்டும். தமிழ் பெண்களுக்கு எதிரான சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள், மனித தன்மையற்ற, இழிவான மனித உரிமை மீறலாகும்.

இலங்கையில் இராணுவத்தினரின் தமிழ் பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் வன்முறை வலுவான ஆதாரங்கள் கொண்டது. பரந்த தண்டனைகளிலிருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியாதவாறு பெண்கள் மனித உரிமைகள் மற்றும் பொதுசன பாதுகாப்பு போன்ற சமூக அந்தஸ்து பெற்ற அமைப்புக்கள் குற்றவியல் வழக்குகளின் சந்தேக நபர்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

கடந்த காலங்களில் செய்தி ஊடக தகவல்களின்படி பாலியல் வன்முறை வழக்குகளில் மருத்துவ சான்றுகள் பெறுவதில் தொடர்புடைய பிரச்சினைகள் விவரிக்கப்பட்டது. அரசு வைத்தியசாலைகளில் இருந்து பாலியல் வன்முறை உட்பட சித்திரவதை வழக்குகளை நடத்துவதற்கு போதுமான மருத்துவ சான்றிதழ்கள் கிடைக்காதது பெரும் தடையாக இருந்தது ஒரு மருத்துவ முறையாக அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. முக்கிய ஆதாரம் பெரும்பாலும் உண்மையில் கிடைக்கவில்லை என்று கூறினார்கள் நீதிபதிகள்.

மாவட்ட மருத்துவ அலுவலர்கள் பாலியல் மற்றும் சித்திரவதை பிற குற்றஞ்சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆராய தயாராக உள்ள நிகழ்வுகளில், இந்த அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்ட ஆதாரங்களை முன்வைக்க பொலீசின் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகினர்.

உதாரணமாக, விஜகலா நந்தகுமார் வழக்கில் மாவட்ட மருத்துவ அதிகாரி ஆரம்பத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதர்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதவானிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னார் பிஷப் மற்றும் தொடர்ந்து பரந்த பொது அமைப்புக்கள் பெண்கள் அமைப்புகளின் மக்களின் கூக்குரலுக்கு இறுதியில் எட்டு நாட்களுக்கு பின்னர் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆய்வு செய்யும் போது பெண்கள் வல்லுறவு மற்றும் பாலியல் தாக்குதல் உட்பட சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்று பரிந்துரைக்கும் வலுவான ஆதாரங்களை கண்டறிந்தார்.

பாதுகாப்பு படைகள் அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை கொண்டுவர விரும்பும் பெண்களுக்கு வரலாற்று நிகழ்வுகளில் ஒப்புதல் அளிக்கக் கூடிய நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இருந்தும் சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது

வட, கிழக்கில் நீதிமன்றங்கள் இருந்தும் ஆயுதப் படைகள் பிரதிவாதிகளை முன்நிறுத்த மறுத்துவிட்டனர்

இலங்கை இராணுவத்தின் சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சுயாதீனமாக விசாரிப்பதற்கு தடை விதித்தது.

ஆயுதப்படைகளால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகளின் பகுப்பாய்வு எடுத்துக்காட்டாக 1998 ஆண்டு இலங்கை பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 37 க்கு மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகப்பெருமளவில் பாலியல் வல்லுறவு, பாலியல் தாக்குதல், கொலை மற்றும் துன்புறுத்தல் போன்ற வடிவங்களில் இருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தனது 2001 ஆம் ஆண்டு அறிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஐ.நா கவனத்தை பெற்றிருப்பதாக அறிவித்த அதே காலகட்டத்தில், இலங்கையில் தமிழ் பெண்களே பாதுகாப்பு படைகளின் வன்முறை இலக்காக இருந்தனர்

ஊடக தகவலின் படி இன்றைய நாள் 10.11.2011 இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் பெண்களை மேலதிக விசாரணைகளை நடாத்துவதற்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக குறித்த பெண்கள் மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக பெண்கள் முன்னேற்றத்தில் ஐக்கிய நாடுகள் பிரிவு, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையம் மற்றும் மகளிர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அலுவலகம் உள்ளிட்ட நிபுணர்கள் குழு சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தீர்மானம் எடுத்துள்ளன.

இந்த நிபுணர்கள் குழு இதற்கும் மேலதிகமாக யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்