/* up Facebook

Sep 9, 2011

பேரணி ஏற்பாட்டுக்கான சந்திப்பு - கொற்றவை, கவிதா முரளிதரன்


வணக்கம் தோழர்களே,

விவரணை:

ஊடகங்களில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவது, பெண்களை வெறும் பாலியல் பண்டமாக சித்தரிக்கும் ஆபாசப் பாடல்கள், காட்சிகள், கதையமைப்புகள், ஆணாதிக்க கதையாடல்கள், விளம்பரங்களில் நிறவெறி ஆகியவற்றை எதிர்த்து பெண்ணியலாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முகப் புத்தகப் பயன்பாட்டாளர்கள் இணைந்து ஒரு பேரணியை நடத்த திட்டமிடப்படுகிறது. இந்த திட்டத்தை வடிவமைக்கவும், நடைமுறைப்படுத்தவும் உங்கள் எல்லோருடைய பங்கெடுப்பும்,உதவியும்,ஆலோசனைகளும் தேவைப்படுகிறது.

அந்த முகப்பூச்சு விளம்பரம் குறித்த புகாரிக்கு உங்களில் பலர் ஆதரவு தெரிவித்தீர்கள். இதைப் போராட்ட வடிவத்திற்கு முன்னெடுக்க வேண்டும் என்று உடனடியாக தனது ஆதரவை தெரிவித்த கருப்புப் பிரதிகள் நீலகண்டன், அமுதா அவர்களுக்கும் நன்றி. சமீபத்தில் இணைந்த கவிதா முரளிதரன் அவர்கள் அடுத்தக் கட்ட முயற்சிக்கான ஒரு படியை எடுக்க தன் கருத்தைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இக்கடிதம். இந்தப் பணியை நடைமுறைப்படுத்தும் முன்பாக ஒரு முதல் கட்ட சந்திப்பை நடத்த விழைகிறோம். பேரணியை எப்படி வடிவமைப்பது, நம் எதிர்ப்பை எவ்வகையில் எல்லாம் பதிவு செய்வது, இன்னபிற விசயங்களை ஆலோசிப்பதே இச்சந்திப்பின் நோக்கம். இந்த சந்திப்பின் போது பேரணி அமைப்புக் குழுவும் தன்னார்வ பங்கெடுப்பின் மூலம் அமைக்கப்பெரும். அவர்களுக்கான பொறுப்புகள் குறித்து உரையாடல் நிகழும்.

சென்னையில் அல்லாதவர்கள் தாங்கள் இருக்கும் ஊர்களில் அதே பேரணித் தேதியில் இதில் பங்கெடுத்தால் இக்கருத்தைப் பரவலாக்கம் செய்ய உதவும்.

இம்முயற்சியில் மேற்கொண்டு தகவல்களைப் பெற, பங்கெடுக்க உங்களது மின் அஞ்சல், தொலைபேசி எண் ஆகியவற்றை kotravaiwrites@gmail.com இல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Pl Vote your Choice in that mail:

Proposed Date of 1st Meeting: 18th / 25th September – Sunday

Proposed Venu: Valluvar Kottam / any park in central location / my house @ nungambakkam / any community hall @ affordable price.

Proposed Time: 4pm

அன்புடன்
கொற்றவை.
கவிதா முரளிதரன்.

2 comments:

OSAI Chella said...

நல்ல முயற்சி ! நானோ ஒரு மினி காட்டுவாசி .. என் ஆதரவு எப்பொழுதும் உண்டு !

Kalidasan.J said...

பெண்ணியம் பற்றி ஆர்வம் உள்ள ஆண்கள் வரலாம் இல்லையா ?

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்