/* up Facebook

Aug 16, 2011

பெண்கள் மீதான வன்முறை வளர்ச்சியை தடுக்கிறது: சூரிச் மாநாட்டில் வலியுறுத்தல்


பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க போராட வேண்டும். குறிப்பாக பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என சூரிச் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் சுவிஸ் ஜனாதிபதி மிச்சேலின் கள்மி ரே மற்றும் மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நவி பிள்ளை கலந்துகொண்டனர்.

காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று மாநாட்டில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு ஒரு ஆயுதமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த வன்முறைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே குறிப்பிட்டார். யுகோசுலோவியாவில் போர் நடந்த போது 50 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.

சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே அயல்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் நவி பிள்ளை மற்றும் இதரத் தலைவர்களை பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேச அழைப்பு விடுத்து இருந்தார். சுவிசில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு நடவடிக்கைக்கு பெண்கள் அமைதி மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 1 கோடி சுவிஸ் பிராங்க் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்