/* up Facebook

Jul 22, 2011

சவுதியில் பிரபல பெண் எழுத்தாளர்கள் இருவருக்கு எழுத தடை?



சவுதி அரேபியாவில் வெளியாகும் ‘அல்வதான்’ (Alwatan) என்கிற நாளிதழின் பிரபல எழுத்தாளர்களான அமல் சாஹித் (Amal Zahid) மற்றும் அமிரா கஷ்காரி (Amira Kashgari) இனிமேல் எழுத வேண்டாம் என்றும் இவர்களின் படைப்புகளை இனி வெளியிடப் போவதில்லை என்றும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. இவர்கள் இருவரும் அந்த நாளிதழில் பல வருடங்களாக எழுதி வருகிறார்கள் என்பதால் இந்த செய்தி பலருக்கும் அதிர்சியை தந்துள்ளது.

இவர்களின் எழுத்துக்களை நிறுத்துவதற்கு எந்த விதமான பெரிய காரணங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சவுதியில் பெண் ஊடகளார்களை குறிவைத்து தாக்குதல் நடப்பதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப் பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்