/* up Facebook

Jul 21, 2011

நிர்வாணமாக குளிக்கச் சொன்னதால் மாடியில் இருந்து குதித்த பெண்!!


பஹ்ரைனில் வேலை பார்த்துவந்த இலங்கைப் பெண் ஒருவரை அவரது எஜமான் நிர்வாணமாக ஆடச் சொன்னதால் அவர் 2ம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இச் சம்பவம் குறித்து அவரை வேலைக்கு அமர்த்திய முகவர் நிலையம் எதனையும் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 18 மாதங்களாக வேலைபார்த்துவந்த துஷாரி ஹெரத் (வயது 27) என்ற பெண்ணே 2மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார். இப் பெண் வேலைபார்த்த வீட்டு எஜமானின் மகன், குளியலறையை திருத்த சில நபர்களைக் கூட்டிவந்ததாகவும், அவர்கள் அதனைத் திருத்தும்வேளை அப் பெண்ணை நிர்வாணமாகக் குளிக்கும்படியும், கதவைப் பூட்டவேண்டாம் என்று எஜமான் கட்டளையிட்டுள்ளார்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அப்பெண் குளியலறை ஜன்னலூடாக கீழே குதித்துள்ளார்.

கை, கால், இடுப்பு மற்றும் முள்ளந்தண்டு ஆகிய இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்களின் கால்களில் ஆணிகளை ஏற்றுவதும், சூடு வைப்பது என பல கொடுமைகளை அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்