/* up Facebook

Jun 9, 2011

16 வருடங்கள் சவுதியில் பூட்டி வைக்கப்பட்ட இலங்கைப் பெண்


இலங்கைப் பணிப்பெண்ணொருவர் சவுதியில் தான் பணிபுரிந்த வீட்டில் 16 வருடங்களாக பூட்டிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சம்பளமும் வழங்கப்படாமல் நாட்டுக்கும் போக விடாமல் எந்த வெளித்தொடர்புமில்லாமல் இவர் இவ்வாறு பூட்டிவைக்கப்பட்டிருக்கிறார் என சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"emirates 24/7" எனும் இணையத்தளம் உள்ளிட்ட பல இணையத்தளங்களும் ஊடகங்களும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. நேற்று புதனன்று  வெளியிட்டுள்ள செய்தியில் Jazan எனும் பிரதேசத்திலேயே இது நிகழ்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

சவூதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கிளைத் தலைவர் அஹ்மத் அல் பஹ்காலி "இது ஒரு மோசமான மனித உரிமை மீறல்" என தெரிவித்திருக்கிறார்.

"அப்பெண் மிகவும் மோசமான நிலயில் இருப்பதாகவும் இந்த குற்றத்தை இழைத்தவர் இப்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் உரிய முறையில் இலங்கை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் மேலதிக விபரங்களை திரட்டி பெண்ணியம் வாசகர்களுக்கு அறியத்தரப்படும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்