/* up Facebook

May 17, 2011

ஒரு லட்சத்துக்கு தனது குழந்தையை விற்ற தாய்


தனது 6 மாத குழந்தையை விற்ற தாயொருவறை கொழும்பில் பொலிசாரால் கைது செய்துள்ளனர்.

குழந்தையை ஒரு லட்சத்துக்கு வாங்கிய தம்பதிகளையும் மட்டக்குளியில் வைத்து கைது செய்துள்ளனர் போலீசார்.

ஹப்புதளையை சேர்ந்த இந்த பெண் கடந்த 3 வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்த போது எஜமானனால் கர்ப்பிணி அக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி வந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து இருந்திருக்கிறார்.

குழந்தையை பெற்று தமக்கு தந்தால், தாம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் கூடவே இருப்பிட வாடகை கைச்செலவு என்பவற்றையும் தருவாதாகவும் ஒரு தம்பதி கேட்கவே இப்பெண்ணும் சம்மதித்திருக்கிறார். குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையை விற்பதற்கு சம்மதித்திருக்கிறார்.

மருதானையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தனது பெயருக்குப் பதிலாக குழந்தையை வாங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த பெண்ணின் பெயரினை அங்கு பதிந்திருக்கிறார்.

அங்கு பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் நான்கு மாதங்கள் குழந்தையை தெமட்டகொடயில் ஒரு வீடொன்றில் வைத்து பராமரித்து விட்டு, கடந்த மார்ச் மாதம் ஒரு லட்சத்துக்கு குழந்தையை கை மாற்றியுள்ளார்.

இப்போது இந்த பெண்ணும், குழந்தையை வாங்கிய தம்பதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை பொலிசாரின் பராமரிப்பில் உள்ளதைப் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளுக்க செல்லும் இலங்கை பெண்கள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி வருவதை "பெண்ணியம்" பதிவு செய்து வந்திருக்கிறது. இப்பெண்கள் பல சந்தர்ப்பங்களில் பணிபுரியும் வீட்டில் உள்ள ஆண்களால் பாலியல் சுரண்டல்களுக்கும் ஆளாகி வருவது வெளியில் பெரிதாக பதியப்படாத செய்திகள். ஆனால் மிகவும் கொடுமைக்கு உரியவை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்