/* up Facebook

Apr 15, 2011

ஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு - நிர்மலா கொற்றவை


ஆண்களுக்கான முகப்பூச்சு (கொல்லி) ஒன்றின் விளம்பரத்தில் பெண் தன்மையை மிகவும் அவமானகரமானது என்று முன்வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. பெண்கள் உபயோகிக்கும் நகப் பூச்சு, தாவணி இவைகளை இழிவு படுத்துகிறது. இவைகளை பெரும்பாலும் ஆண் முதலாளிகள் தானே பெண்களுக்கான ‘பண்டம்’ என்று உருவாக்கியிருக்கிறார்கள். ஆணின் சருமம் கடிமானது அதற்கு பெண்கள் (after all women) கிரீம் மலினமானது என்று சொல்வதோடு அப்பூச்சை உபயோகிக்கும் ஆணின் பின்னால் பெண்கள் வரமாட்டார்கள் என்கிற ரீதியில், ஆணுக்கான பூச்சை உபயோகிக்கும் ‘மீசை’ வைத்த ஆணைப் பார்த்து பெண்கள் ஆசை படுவது போல் காண்பிக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் நடிகர், தன்னைப் பெற்றவள் ஒரு பெண், தான் திருமணம் செய்திருப்பதும் ஒரு பெண், தனக்கும் ஒரு பெண் பிறந்திருக்கிறாள் என்பதை எல்லாம் இதில் நடிக்கும் பொழுது நிணைவில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. இவர்களது குடும்பம் தான் ‘சிறந்த மாதிரி’ குடும்பமாக ஊடகங்கள் முன் வைக்கின்றன.

தலா 50 ரூபாய்க்கு உலக அழகிகள் தங்கள் உடலை திறந்து போட்டு ஆடுகிறார்கள் என்றால் தலா 20 ரூபாய் காசுக்கு நடிகர்கள் பெண்களை இழிவு படுத்தி, பெண்மையை தாழ்த்தி பிரகண்டனம் செய்கிறார்கள். அதோடு, குழந்தைகளுக்கும் பண்டங்களை பரிந்துரை செய்கிறார்கள் தலா 2 ரூபாய் காசுக்காக. இவர்கள் பரிந்துரை செய்யும் எந்தப் பொருளையும் இவர்கள் பயன்படுத்துகிறார்களா, தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே.

நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கிணையாக எதிர்கால நாற்காலியை குறிவைத்து, வருமான வரியை தவிர்ப்பதற்கு என்று பிறந்த நாள் இலவசங்களை அள்ளி வழங்கி மக்களின் அறியாமையை, எளிய மனங்களின் அன்பை ஏய்த்துப் பிழைக்கிறார்கள். பின்னணி, வரலாறு ஏதும் தெரியாமல் மீனவப் பிரச்சனை, தமிழர் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை, தனித் தமிழ் தேசியம், இசுலாமியர் தீவிரவாதம் என்று எதையாவது உளறி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

திரைப்படங்களில் அரசியல்வாதியை எதிர்த்து அதிரடி செய்பவர்கள், நிஜ வாழ்க்கையில் கோழைகளாக அவர்களுக்கு ஜால்ரா தட்டி சுயமரியாதையற்ற பிழைப்பு நடத்துகிறார்கள்.

பெண் தன்மையைக் கேவலப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஆண்களையும் இவ்விளம்பரங்கள் தரக்குறைவாக சித்தரிக்கிறது, பெண்களைக் கவர்வதையும், கிண்டல் செய்வதையும் தவிர ஆண்களுக்கு வேறு நினைப்பே கிடையாதா என்ன? இவர்களின் தவறான கதாநாயகத் தன்மை, ஆண் தன்மைகள் பற்றிய சித்தரிப்பு ஆண்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பெண் தன்மைக் கேவலமானது எனும் திரைப்படங்களின் கேளிக்கைகள், திருநங்கைகளை மக்கள் கிண்டல் செய்வதற்கான முக்கியக் காரணமாய் இருக்கிறது.


Fair & Handsome எனும் அந்த விளம்பரத்தை, திமிர் பிடித்த இவர்களின் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து சுயமரியாதை உள்ளவர்களாக நாம் ஏதாவது செய்யவேண்டும்.

நன்றி - சாவின் உதடுகள் 

1 comments:

Garunyan said...

முற்றிலும் தப்பான கருத்தியலைக்கொண்ட சித்தரிப்பு.
ஆண்களைப் பன்றிகளென்று சித்தரிப்பதாலோ, பெண்களை நாய்களென்று சித்தரிப்பதாலோ பெண்ணிய சிந்தனைகள் உயர்ந்துவிடப்போவதில்லை.
மாறாக இருவரும் சேர்ந்து அமர்ந்து நாம் மனிதர்களாக மாறுவதெங்கனம் என்றவகையில் ஒரு வேலைத்திட்டத்தை எங்கனம் கடைப்பிடிக்கலாம் என்பதைச் சேர்ந்து உரத்துச் சிந்திக்கவேண்டும். ஆணும் பெண்ணும் எதிரிகட்டிவாழ இங்கு உருவாகியிருக்கவில்லை.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்