/* up Facebook

Apr 4, 2011

றிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்கும்படி ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள்!


சவூதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதிலும் சவூதி அரேபிய அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றபோது நியாயமான விசாரணைக்குரிய உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய விடயமாக இது அமைந்துள்ளது என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உண்மையான வயதில் மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட றிசானா கைக்குழந்தையை கொன்றுள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும்போதே குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளதாக றிசானா தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை மனித உரிமைக் குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன. எனினும் றிசானாவை விடுதலை செய்வதற்கு இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

றிசானா நபீக்கின் விடுதலை குறித்து அனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்