/* up Facebook

Mar 6, 2011

நூற்றாண்டைக் கொண்டாடும் அகில உலக மாதர் தினம் -இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

சர்வதேச பெண்கள் தினம்

அவுஸ்திரேலியப் பெண்ணியவாதிகள் 08.03.2011ம் ஆண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி பாலத்தில் வைத்து அகில உலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் முதல் விழாவைத் தொடங்கி வைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து உலகமெங்கும் உள்ள பல நகரங்களில் 1500 மேலான பெண்கள் தின நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

அமெரிக்காவில் பத்து பெரிய நகரங்களில் நடாத்தப்படும் பெண்கள் தின நிகழ்ச்சிகள் 176 நாடுகளுக்கு ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். இலங்கை உட்பட பல நாடுகளில் மாதர் தினவிழா கொண்டாடப்படவிருக்கிறது.

1977ல் ஐக்கியநாடுகள் சபை அகில உலக மாதர் தின விழாவை அங்கிகாரம் செய்தது. இன்று இரஷ்யா, சீனா, வியட்னாம், பலகேரியா போன்ற நாடுகளில் அகில உலக மாதர் தினத்திற்கு அரசவிடுமுறை விடுகிறார்கள்.

இன்று உலகம் பரந்த வித்தில் பெண்கள் தின விழாக்களை நடத்திப் பெண்களுக்கான விடயங்களை அலசுகிறார்கள் ஆராய்கிறார்கள். பல தரப்பட்ட விடயங்களும் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன. பல கலைவிழாக்களும் நடக்கின்றன.

இங்கிலாந்தில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி கிட்டத்தட்ட 400 நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றனவாம். இந்த விழா நிகழ்ச்சிகளில் பெண்கள் அடைந்த பொருளாதார, அரசியல், கல்வி முன்னேற்றங்கள் பற்றிப் பேசப் படும்.

1857ம் ஆண்டு நியுயோர்க் நகர்த் துணிச்சாலைகளில மிகக் குறைந்த ஊழியத்தில் வேலை செய்த பெண்கள் தங்கள் சம்பளத்தை உயர்தத்ச்சொல்லிப் போராடினார்கள் அந்தப் போராட்டம் நியுயோர்க நகர் காணாத மாபெரும் ஊர்வலமாக மாறியது. அன்று பெண்கள் தொடர்ந்த போராட்டமும் அதைத் தொடர்ந்து பல பெண்ணியவாதிகளால் எடுக்கப் பட விளிப்புணர்ச்சி வேலைகளும் 1911ம் ஆண்டு முதலாவது அகில உலக மாதர் தின விழாவை ஏற்படுத்தியது.

ஆனாலும் சமயம், கலாச்சாரம், பண்பாடு, சாதிமுறைகள் என்ற அடி;படையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியற் போராட்டங்களாலும் பெண்கள் பல தரப்பட்ட வன்முறைகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள். பல நாடுகளில் நடக்கும் பல தரப்பட்ட போர் அவலங்களில்; இறப்பவர்களில் 75 விகிதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவர்.

உலகம் பலவித்திலும் நவினத்துவம்பெற்று வரும் இக்காலகட்டத்தில் பெண்களை ஆண்கள் சமத்துவத்துடன் நடத்துவது அருமையாகும். பெண்கயைப் பாதுகாப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் சட்டஙகளும்; அவற்றைப் பிரகடனப்படுத்தும் அரச இயந்திரமும் ஆண்களின் கையிலிருக்கின்றன. இதனால் பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமான வாழ்க்கையும் ஆண்களின் பிடியிலேயே இருக்கின்றன. இதை மாற்றியமைக்கும் வலிமையுடைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் என்ற முறையில் பெண்களின் தொகை மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால் பல மாற்றங்களை முன்னெடுப்பத முடியாத காரியமாகும். அகில உலகில் பாராளுமன்றம் செல்லும் பெண்கள் விகிதம் 17விகிதம் மட்டுமே. உலக அபிப்பிராயத்தையும் விழிப்புணர்ச்சிகளையும் உண்டாக்கும் ஊடகத் துறையில் வேலை செய்யும் பெண்கள் கிட்டத்தட்ட 24 விகிதமாகும்.

இன்று உலகில் கூடிக்கொண்டுவரும் சனத்தொகையும் அந்தச் சனப் பெருக்கத்துக்கு உணவு கொடுக்க முடியாத சுற்றாடல் சூழ்நிலைப் பிரச்சினை மட்டுமல்லாமல் பல நாடுகளும் எதிர்பார்க்கும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும்.

உலகில் பல பாகங்களுpலும் அதிலும் பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டு வரும் நாடுகளில் நடக்கும் அரசியற் போராடடங்கள், சுற்றாடல் சூழ்நிலை மாற்றங்கள் போன்ற பல காரணிகளால் பல பெண்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள் குழந்தைகளாக இருக்கும்போதே திருமணத்திற்குள் தள்ளி விடப் படுகிறார்கள். உதாரணமாக, நேபாளம் போன்ற பகுதிகளில் பெண்களின் திருமண வயது பதினெட்டாக இருந்தபோதிலும் வறுமை காரணமாகப் பதினைந்து வயதிலிலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இலங்கையில் நடந்து முடிந்த போரால் ஆயிரக் கணக்கான பெண்கள் விதவைகளாகவும் பழைய போராளிகளாகவும் அல்லற்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற எங்களால் முடிந்தவற்றைச் செய்வது எங்கள் தார்மீகக் கடைமையாகும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்