/* up Facebook

Mar 6, 2011

யுத்தமும் இலங்கை பெண்களும் சில குறிப்புகள் - சூரியகுமாரி பஞ்சநாதன்


யுத்தம் எம் மீது திணிக்கப்பட்டது சகல அடக்கு முறைக்கும் நாம் ஆளானோம் அரசியல் ரீதியான காரணங்கள் சொல்லப்பட்டு எமது முழு இனத்தின் மீதும் சுமத்தப்பட்ட இந்த யுத்தம் கடைசியில் ஒன்றுமே இல்லை என்றாகி வடுக்களை மட்டும் எம்மீது சுமத்தி விட்டு போய் உள்ளது.

இந்த அனர்த்த நிலையிலிருந்து எப்படி நாம் மீள உயிர் பெற்று எழ முடியும்???

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரவேண்டியதே இன்று காலத்தின் தேவை உள ரீதியாகவும் பொருளார ரீதியாகவும் விளிம்பு நிலையில் இருக்கும் இந்த பெண்களுக்கு நிறுவன ரீதியாக எப்படி உதவ முடியும் என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. அதிலும் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது குறித்தும் சரியான அணுகுமுறை அவசியமானதாக உள்ளது.

சிறு கைத்தொழில்களை அறிமுகப்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது ஒரு புறமிருக்க யுத்தத்தினால் பெரும்பாதிப்புக்குள்ளான பெண்களின் மன அழுத்தத்தத்தை போக்க உருப்படியான செயற்பாடுகளை நாம் நடைமுறைப்படுத்தவேண்டும் மற்ற எல்லாவற்றையும் விட உளவியல் ரீதியான கவுன்செல்லிங் இந்த பெண்களுக்கு மிகவும் முக்கியமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து வாழ்வின் பரிநாமங்களினை அனுபவரீதியாக கண்டறிய முன்னமே இந்த கொடிய யுத்தத்தினால் குடும்ப அங்கத்தவர்களை இழந்து பரிதவிக்கும் இவர்கள் வலுக்கொண்டு எழுந்து நிட்பத்ட்கு கவுன்சிலிங் மிகவும் முக்கியமானது.

கவுன்சிலிங் குறித்த அனுபவமுள்ளவர்கள் மனமுவந்து இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் யுத்தம் ஓய்ந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் புலம் பெயர் மக்கள் என்ற பெயரில் எம்மவர்கள் திரும்ப திரும்ப இலங்கை அரசுக்கு ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதானது அதன் எதிரொலியாக எமது பெண்கள் மீதே அரசு மீண்டும் மீண்டும தனது பாசிச வெறியை கட்டவிழ்த்து விட வாய்ப்பளிப்பவர்கள் ஆகிறார்கள் அதனால் புலம் பெயர் மக்களே தயவு கூர்ந்து உங்கள் போராட்டங்களை எமது நாட்டில் வந்து நடத்துங்கள் இல்லையேல் மௌனமாக இருந்து இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் உலகெங்கிலும் யுத்தம் நடை பெறுகின்ற நாடுகளில் பெண்களே அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக இருந்தாலும்..எமது நாட்டின் பூகோள அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து இந்த யுத்தம் சாத்தியமற்றது என ஊகிக்குமிடத்தில் ஏன் எமது பெண்களும் சரி மக்களும் சரி அர்த்தமற்று தமது வாழ்வினை இழக்க வேண்டும்????

இந்த கொடிய யுத்தம் தமிழ் பெண்களை மட்டுமல்ல சிங்கள் தேசத்து பெண்களையும் அனாதரவாக்கயுள்ளது.அவர்களும் எங்களை போன்றே மனநிலை பிறழ்ந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மனிதத்துவத்திட்கு மதிப்பளிப்போம் எமது சகோதரிகளை வாழவைப்போம் இதுவே இலங்கை வாழ் பெண்களின் சர்வதேச பெண்கள் தின அறைகூவலாக இருக்கட்டும்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்