/* up Facebook

Mar 11, 2011

உலகின் சிறந்த 100 பேரில் 5 இந்திய பெண்கள் -

வந்தனா சிவா
அபரஜிதா கோகோய்
அருந்ததிராய்
சம்பத்பால் தேவி
ஜெய்ஸ்ரீ சத்புதே

பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் எழுத்தாளர் அருந்ததி ராய், பெண்ணுரிமை போராளி ஜெய்ஸ்ரீ சத்புதே உட்பட 5 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

100வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் மற்ற  பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தூண்டுதலாகவும் விளங்குபவர்கள் அடங்கிய முன்னணி 100 பெண்கள் பட்டியலை "தி கார்டியன்" வெளியிட்டுள்ளது.

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், ஏழை பெண்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ சத்புதே, பெண்ணுரிமைக்காக போராடும் வந்தனா சிவா, கர்ப்பிணிகள் பாதுகாப்பு அமைப்பான ஒயிட் ரிப்பன் ஒருங்கிணைப்பாளர் அபரஜிதா கோகோய், குலாபி கேங் அமைப் பை நடத்தும் சம்பத்பால் தேவி ஆகிய 5 இந்திய பெண்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதுதவிர, பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி மற்றும் திரைப்பட இயக்குநர் மீரா நாயர் உள்ளிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

தொழில் துறையில் உயர் பதவிகளை அடைவதற்கு முன்னுதாரணமாக நூயி விளங்குகிறார் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

http://headlinesindia.mapsofindia.com/social-interest-news/women/five-indians-in-list-of-top-100-women-77397.html

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்