/* up Facebook

Feb 12, 2011

ரோஹினியின் உடலிலிருந்து ஏழு ஆணிகள் நீக்கப்பட்டன - வெரோனிக்கா


கடந்த 9 டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற ரோகினி ராஜபக்ஸ பணிபுரிந்துகொண்டிருக்கும் போது மயக்கமாகி விழுந்திருக்கிறார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று திரும்பிய போதும், தொடர்ந்தும் மயக்கமாகி, சோர்வுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் நாடு திரும்பியுள்ளார்.

முன்னர் போல் அவர் அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. தொடர்ந்து சுகவீனமுற்றதால் பொல்பிடிகம பிரதேசத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபடுள்ளார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரின் உடலில் கம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த (09.02.2011) 9ஆம் திகதி டொக்டர் கமகே தலைமையில் இரு மணித்தியாலங்கள் நடந்த சத்திர சிகச்சையை தொடர்ந்து அவரின் உடலில் இருந்து 7 ஆணிகள் நீக்கப்பட்டுள்ளன. 8-10 mm உடைய 3 கம்பிகள் வலது கையிலிருந்தும் இரு குதிக்கால்களில் இருந்தும் 7 ஆணைகளும் உட்பட மொத்தம் ௭ ஆணிகள் நீக்கப்பட்டதாக வைத்தியர் ராஜமன்த்ரி அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்குக்கு தொழில் புரிய சென்ற இலங்கை பெண்கள் அங்கு தொடர்ந்தும் எஜமானர்களால் சித்திரவதை செய்யப்பட்டு வருவது குறித்த செய்திகள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமுள்ளன.. ஏற்கனவே பல இலங்கை பெண்கள் இவ்வாறு ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இலநகை திரும்பிய சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.

நியூ யோர்கிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது குறித்து விசனம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இந்த செயல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

1.8 மில்லியன் இலங்கையர்கள் மதிய கிழக்கில் பணிபுரிகின்றார்கள் இவர்களில் 70 வீதமானோர் பெண்கள் ஆவர்

35 வயதையுடைய ரோகினி ராஜபக்ச இரு குழந்தைகளின் தாயார். இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் இவர் .

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்