/* up Facebook

Feb 3, 2011

மணிக்குட்டி என்ற விளிப்பில் ஒளிந்திருக்கும் தந்திரம் - லீனா மணிமேகலை


வல்லாங்கு

ஒரு பீரங்கி உடல் மேலேறி நசுக்குவதற்கும் வல்லாங்கப்படுவதற்கும்
பெரும் வித்தியாசமில்லை.
என்ன, இதில் சதைகளை கூட்டி அள்ளிப் பார்த்தால் விந்து பிசுபிசுக்கும்
ரேகைகளில் வெறியின் கறை படிந்திருக்கும்

நச்சுப் பாம்பால் தீண்டப் படுவதற்கும் வல்லாங்கப்படுவதற்கும்
பெரும் வேறுபாடில்லை
மணிக்குட்டி துணையில்லாததா அரைகுறை ஆடை அணிந்திருந்ததா
நடத்தை கெட்டதா அதிகமாய் பேசியதா
என்ற கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள்

காற்றாலையின் விசிறிகளுக்கிடையே தலை சிக்கிக்கொள்வதற்கும்
வல்லாங்கப்படுவதற்கும் அனுபவம் வேறில்லை
இதில் சாவு மெல்ல நடக்கும் ஒரு சாபத்தின் மூச்சு போல

குகையை துளைக்கும் பைசாச வண்டு
ஊனை அறுக்கும் கூதிர் காற்று
கருவேலத்தின் தணல்
கொடுங்கனவின் நிழற்குத்து
சாணை பிடித்த சுன்னிகள்
இவை
ஒளவை நோன்பில் அப்பத்தா பிடித்து காண்பித்த கொழுக்கட்டைகளிலிருந்து
ஸ்படிக லிங்கத்தின் வழவழப்பிலிருந்து
சிறுபிராய சுரைக்காய் பிஞ்சு விளையாட்டிலிருந்து
நூறு சதவிகிதம் வேறுபட்டவை

ஒரு வல்லாங்கிலிருந்து தான் தொடங்கியிருக்கும் போருக்கான கோட்பாடு
அதிரும் டில்டோக்களின் எந்திர துவக்கு சத்தத்திலிருந்து
ஏகுகிறது வெறுப்பின் நெடி
கொலைத்திட்டத்தின் வாய்ப்பாடுகளில்
எதைக் கூட்டினாலும் பெருக்கினாலும் இசைப்ப்ரியாக்கள்

("இசைப்பிரியா " - இலங்கை அரசின் போர்க்குறறங்க்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 வீடியோ காட்சியில்,அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலை போராளி இசைப்ரியாவின் உடல் "பாலியல் பலாத்காரம்" செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன ")

நன்றி - லீனா மணிமேகலை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்