/* up Facebook

Feb 17, 2011

4 ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் திரும்பிய மல்காந்தி - வெரோனிகா


4 ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் திரும்பிய மல்காந்தி பாலியல் வன்முறை முயற்சிக்கு உள்ளாகி பல வதைகளின் பின் நாடு திரும்பி இருக்கிறார். காலி பிரதேசத்தை சேர்ந்த இவர் 4 குழந்தைகளுக்கு தாயாவார்.

33 வயதையுடைய மல்காந்தி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13 அன்று சவுதிக்கு பணிப்பெண் வேலைக்காக சென்ற மல்காந்தி ஒரு சில நாட்களில் வீட்டு எஜமானால் பாலியல் தந்தரவுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். பாலியல் வல்லுறவில் இருந்து தப்புவதற்காக அவர் தனது மறுப்பை வெளிக்காட்டிய சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டுள்ளார். அப்படி மறுத்தபோது ஒருநாள் கால்களையும் கைகளையும் கட்டிப்போட்டு கையை இழுத்து வைத்து கம்பிகளை ஏற்றியுள்ளார். மயக்கம தெளிந்த போது அவர் கைகள் இரண்டும் வலி அதிகமாகியிருக்கிறது. இது வெளியே தெரிந்தால் கொலை செய்வதாக பயமுறுத்தி இருக்கிறார்.

அதனை தொடர்ந்து அவர் இலங்கையிலுள்ள கணவர் ரத்நாயக்கவுடன் தொடர்பு கொண்டு "என்னை கொலை செய்துவிடுவார்கள் உடனேய என்னை இலங்கைக்கு எடுப்பியுங்கள்.." என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட எஜென்சிக்கு அறிவித்த போது அவர்கள் 1,85,000 ரூபாய்கள் கேட்டுள்ளனர் மல்காந்தியின் கணவர் இருப்பதை விற்று, கடன் வாங்கி ஏஜென்சிக்கு கட்டியதை தொடர்ந்து கடந்த பெப்ரவரி 13 மல்காந்தி இலங்கைக்கு வந்துள்ளார். (ஆனால் ஏஜென்சி இது விடயத்தில் எந்த ஒன்றையும் செய்யவில்லை)

தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதித்த போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் நான்கு கம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ௧௫ஆம் திகதி இரவு இவரின் கைகளில் இருந்து 4 கம்பிகளும் நீக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்