/* up Facebook

Jan 9, 2011

ஆச்சரியங்களுக்காகக் காத்திருத்தல் - தில்லை



இருளடர்ந்த பகலாய் 
அடங்கிக் கிடக்கிறது மனம்

நவீன கவிதை ஒன்றை 
நக்கி குடிக்கிறது நாக்கு

பெண்ணுடலின் விடுதலையை 
அதன் பேரனுபவத்தை
அள்ளி அளைவதற்காய் விரியும் வரிகள்

மூடுண்ட உணர்வுகள் பிரவகித்து - ஊறி 
பிரபஞ்சத்தை நனைக்கிறது

முக்கி முனகி அதிசயித்து 
முலைகளை அழுத்திக் குப்புறக் கிடக்கிறது 
துளிர்விடும் ஒரு கவிதை

கால்களை உயர்த்தியும் பணித்தும் 
என்னமாய் உற்சாகப்படுகின்றேன்
ஒரு கவிதையாக...


தில்லை - 08012011

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்