/* up Facebook

Jan 7, 2011

வரலாற்றின் நாட்காட்டியில் தெறிக்கும் குருதி - கொற்றவை


கேள் அம்மா.....
நான் பெண்
கம்பீரத்தின் தாள லயத்தோடு உச்சரிப்பேன் இதை

எனக்கான வார்த்தைகளை
வரலாற்றுப் பக்கங்களிலிருந்து
தோண்டி எடுக்கையில்
சூழ்ந்திருக்கும் மௌனங்கள்
என்
வலிகளுக்கான வார்த்தைகளை
மூடியிருந்தது

என் ஆதிக்கையிலிருந்த கலப்பையைப் பிடுங்கி
வெற்று வாசலைப் பெருக்க துடப்பமும்
எச்சில்களை அள்ள
முறமும் திணித்த போது
நான்
நம்பமுடியாத என் விழிகளால்
கண்டேன்

என்
குரல்களை பிடுங்கி யாகத்தில்
இடும் கைகளை
சொற்களை
வரலாற்றை

கேள் அம்மா....
நான் பெண்ணாக்கப்பட்டேன்
அடிமை மணம் வீசும் சொற்களிவை

பூமியை மிதித்துழுத கால்களில்
மரங்களை நட்டு வனமெழுப்பிய
என் கைகளில்
கால்களில்
மருதாணி இட்டார்கள்


எலும்புகளில்
எழுப்பியிருந்த கல்லறை சுவற்றுக்குள்
நாவற்றவளுக்குப் படிக்க
கடவுளரின் கதைகள் திணிக்கப்பட்டன

கேள் அம்மா
நான்தான் ஆதி கவி

இதில் வீசுவது பிணவாடை

வழியும் வியர்வையில் தூமையை
பிரித்தெடுத்தார்கள்
என்னுடல் அன்னியமானது

மூன்று நாட்களில் நான் மனுஷியில்லை
மகளில்லை
சகோதரி, தாயில்லை
பெண்
என
எதுவுமேயற்ற பிண்டமானேன்

உடைந்தொழுகும் கரு முட்டைகளை சேமித்து

ஒரு காட்டு விலங்கிற்குத்
தின்னக்கொடுத்திருக்கலாம்
கருப்பையைத் திறந்து மூடும் சாத்தியம் கண்டிருந்தால்

குழந்தைகளின் பேரோசை
அவர்கள் செவிக்குள் அமிலத்தை
எண்ணிக்கை
அவர்களின் விழிகளில் அம்பொன்றைபாய்ச்சிய கணத்தில்
அந்நியமாக்கினர்
என்னை
என்னிடமிருந்து


நிர்வாணத்தின் குரல்வளையை
திருகினர்
தங்கள் இறுகிய கரங்களால்

கேள் அம்மா...
நான் அறிகிறேன்
இப்பொழுது....

நான் தான்
நான்

எழுதுவேன் இதை
வரலாற்றின் வரிகளை
மாதவிடாய்க் குருதியால்.

நன்றி - கொற்றவை 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்