/* up Facebook

Dec 17, 2010

போரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எம்.பி.க்களின் ஒன்றியம் தீர்மானம் தலைவியான அமைச்சர் சுமேதா ஜயசேன

 

வடக்கு, கிழக்கில் போரினால் கணவரை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆராயவும் உதவிகள் வழங்கவும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாடு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு உருவான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஏழாவது பாராளுமன்றத்தில் இரண்டு தடவைகள் கூடியுள்ளது. இதனை முன்னிட்டே இந்த ஊடகவியலாளர் மாநாட்டை இந்த ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

மிக முக்கியமான ஏழு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல், பெண்கள் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தை பாதுகாத்தல், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் இல்லாதொழித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உட்பட தொழில் புரியும் பெண்களது நலனோம்புகள் தொடர்பாக ஆராய்தல், வறிய பெண்கள் மற்றும் கணவரை இழந்தவர்களுகளின் வறுமையை ஒழித்தல், அவர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குதல், பெண்களது நலன்களின் பொருட்டு தேவையான சட்டங்களை வகுத்தல், பொதுவாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல் போன்ற பிரதான விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன, உபதலைவர் சந்திராணி பண்டார ஜயசிங்க எம்.பி., தலதா அத்துக்கோரள எம்.பி., அனோமா கமகே எம்.பி., ஸ்ரீயானி விஜே விக்கிரம எம்.பி., மாலினி பொன்சேகா எம்.பி. ,விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்றியத்தின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு; தலைவர் அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன, உறுப்பினர்களான அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியராச்சி, பிரதி அமைச்சர் திருமதி நிருபமா ராஜபக்ஷ, திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்க, திருமதி தலதா அத்துக் கோரள, திருமதி அனோமா கமகே, திருமதி விஜயகலா மகேஸ்வரன், செல்வி கமலா ரணதுங்க, திருமதி ஸ்ரீயானி விஜே விக்கிரம, திருமதி உபேக்ஷா சுவர்னமாலி, திருமதி ரோசி சேனாநாயக்க, திருமதி மாலினி பொன்சேகா, டாக்டர் திருமதி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் உள்ளனர்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்