/* up Facebook

Nov 1, 2010

அருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)



காஸ்மீர் மக்களின் விடுதலை குறித்தும் அவர்களின் சுததிரப் போராட்டம், மற்றும் அப்பிரதேசங்களில் இந்திய அரச படையினரின் அட்டுழியங்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான அருந்ததி ராயின் கருத்துக்களை் தொடர்ந்து அவரின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் பாரதிய ஜனதா கட்சி தனது மகளிர் அணியை அனுப்பி அருந்ததி ராயின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றுக்கு தூண்டியிருந்தனர்.

அருந்ததி ராயின் கருத்துக்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இந்தியாவை துண்டாடும் தேசத்துரோகியாகவும் இந்திய பெரும்போக்கு கட்சிகளும், இந்திய பார்ப்பனிய ஊடகங்களும் கடந்த வாரம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ஆவேசமாக ஊர்வலமாக சென்ற பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் அவரது வீட்டு வாசற் கதவுகளையும், பூக்கன்றுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த பார்ப்பணிய, இந்துத்துவ வெறியினை பெண்ணியம் வன்மையாக கண்டிக்கிறது. அருந்ததி ராய் இன்றைய இந்தியாவின் விடுதலைப்போராட்டங்களின் குறியீடாக இருக்கிறார். அவர் போன்ற சக்திகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கூடகவே சமூகப் போராட்டங்களின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை நாம் உறுதிசெய்துகொள்ளமுடியும்.

இந்திய இந்துத்துவ, பார்ப்பனிய, மேலாதிக்கத்தை எதிர்த்தும், பேசியும் வந்த பலர் அவ்வாறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி நாட்டில் வாழமுடியாமல் இதற்கு முன்னர் பலர் வெளியேறியிருக்கின்றனர். அருந்ததி ராய் இதுவரை துணிச்சலாக விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும், அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரது உயிருக்கு என்றுமில்லாத அச்சுறுத்தல் இப்போது அவரை சுற்றி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.



அருந்ததி ராய் ஒக்டோபர் 24 அன்று உரையாற்றிய உரையின் வீடியோ பதிவினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 



0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்