/* up Facebook

Oct 7, 2010

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்


இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்:-யாழ். நீதிமன்றத்தில் யுவதி வாக்கு மூலம்.

குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் என் னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலி யல் வல்லுறவுக்குட்படுத்தினார்.கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் யாழ். நீதிமன்றத்தில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் மேற்கண்டவாறு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

யாழ். போதனா வைத்தியசாலை யில் கடந்த ஓகஸ்ட் மாதம் 31 திகதி 20 வயதுடைய திருமணமாகாத யுவதி யொருவர் பெண்பிள்ளை யொன் றைப் பெற்றெடுத்தார்.அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப் படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப் பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இந்தக் கடிதம் தொடர்பான விசாரணை களை மேற்கொண்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந் தராசா குறித்த பெண்ணி டமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளு மாறு நிகழ்ச்சித்திட்ட உதவியாளரி டம் உத்தரவிட்டார்.

அந்தப் பெண்மணி நிகழ்ச்சித் திட்ட உதவியாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங் கள் வருமாறு:

வவுனியா அருணாச்சலம் முகா மில் தங்கியிருந்த போது இராணுவத் தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னு டன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லை யெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனது குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். எனது குழந்தையை பதுளையில் உள்ள மாமியார் வீட்டில் வளர்க்க எண்ணியுள்ளேன் என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் நீதி வான் நீதிமன்றத்தில் அதனைச் சமர்ப் பித்தார்.இதன் பின்னர் குழந்தையை அழைத்துச் செல்ல நீதிமன்ற நீதி வான் அனுமதியளித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணை கள் நடைபெற்று வருகின்றன.

நன்றி - செய்தி 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்