/* up Facebook

Oct 22, 2010

கிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை - கொற்றவை



புன்னகையின் நரம்புகள் கொண்டு பின்னப்பட்ட நாற்காலி
மகாசாம்ராஜ்ஜியம்


இருவரை
அழுத்தத்துடன் முத்தமிடுகிறான் சூரியன்
செம்மண்ணை
நிழல் ஒன்று போல் முத்தமிடுகிறது


பாலைவனம் பற்றிய உரையாடலில் உலர்கிறது நாக்குகள்
கொலைகள் பற்றிய புரிதல் வரை
பயணிக்கிறது கால் தடங்கள்


சிறகு பற்றிய கணவு
ரகசியமாக வைக்கப்பட்டது


தேரில் ஒன்றாக பயணம் செய்தாலும்
தேரோட்டி அரசனாவதில்லை
ஒரு போதும் கிரீடங்கள்
அடிமைகளுக்கென செய்யப்படுவதுமில்லை


உதட்டின் சொந்தக்காரர்களுக்கே
குரலும் சொந்தமென்ற விதியெங்குமில்லை


நம்பிக்கை விரியுமளவுக்கு
நடத்தைகள் விரிவதில்லை
அன்பின் அதிகாரத்தின் முன்
கண்ணீர் மண்டியிட்டே கிடக்கிறது


மகா சாம்ராஜ்யத்தில்
பொம்மைகளுக்கே நாற்காலி...


நன்றி - கொற்றவை 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்