/* up Facebook

Sep 14, 2010

மழைக்குப் பின்னதான இரவு..! - மயூ மனோ


ஆயத்தமில்லாமல் இருக்கவில்லை
இருந்தும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டு
சுற்றிப் பெய்த மழையை
பிராக்குப் பார்த்தபடியிருந்தேன்
அது தூவான முத்தங்களை
யன்னல் கம்பிகளில் பதித்தது

தொடர்பற்றுப் போன துளிகளைத் தேடி
துமித்துக் கொண்டிருக்கிறது வானம்
இன்னும்
விட்டு விட்டு
இடிகளில் முரசறைந்து
மின்னல்கள் புலப்படவில்லை
பிறிதொரு நாள்
தேடலாம்
கிடைக்கும்

ஆறுதலாய் அழுதோய்ந்திருக்கிறது
வானம் இப்போது
சிணுங்கலை நிறுத்தி நொடிகளாகிறது

கோடை அந்தியொன்றின் வெஞ்சூட்டில்
மிதப்பதால் சினந்து
அசைக்காமல் ஊடுகிறது காற்று
அசையா மரங்களுடன்

எஞ்சிய வர்ணங்களைக் கட்டிக் கொண்டு
சுருளத் தொடங்கியிருக்கிறது வானவில்
இடை பரவிய நிறங்கள்
மங்கி
கரு முகிலுறிஞ்சி
உறிஞ்சி
அடர்ந்து

கவிந்தடக்கும் இருளின் கரங்களுக்குள்
மௌனித்து மயங்கி
சுகிப்பதாய்ப் பாவித்துக் கிடக்கிறது
மண்
மௌனப் புணர்ச்சியின் பின்
ஒரு இரவு
மழைக்குப் பின்னதான
இன்னொரு இரவு...!!


நன்றி - நதியானவள்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்