/* up Facebook

Sep 10, 2010

குவைட்டில் பணிப்பெண் வதைக்கப்பட்டு நோயாளியாக திரும்பியுள்ளார் -வெறோனிக்கா


4 வருடங்களுக்கு முன்னர் குவைட்டில் எடுக்கப்பட்ட படம்



இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலை.

குவைட்டில் வீட்டு வேலைக்காக பணிபுரிய சென்ற பணிப்பெண் வதைக்கப்பட்டு நோயாளியாக நாடு கொணரப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து குவைட்டில் பணிபுரிய சென்றிருக்கிறார் ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்த சோமாவதி (இப்போது இவரது வயது 52).

பணிபுரிந்த வீட்டில் எனக்கு இருக்க இடமளிக்கவில்லை. வெளி இடமொன்றில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தேன். அங்கு ஏற்கெனவே 5 பேர் வசித்து வந்தனர். வீட்டு எஜமானும் எஜமானியும் என்னை கடுமையாக வேலை வாங்கி வந்தார்கள். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்கு அது திருப்தியளிக்கவில்லை. என்னை அடித்தார்கள். திட்டினார்கள்.. ஒரு நாள் என்னைத் தாக்கி விட்டு, பலாத்காரமாக எனது வாயைத் திறந்து வெள்ளையாக குளிர்ந்த ஒரு பொருளைத் திணித்தார்கள். அதன் பின்னர் தான் இந்த நிலைக்கு ஆளானேன்.

அவரது மகன் (தரங்க வயது 35) பத்திரிகைக்கு அளித்த தகவலின்படி... "... எங்கள் குடும்ப வறுமை காரணமாக அம்மா குவைட் சென்றார். 2008ஆம் ஆண்டு அவர் எங்களுக்கு பணம் அனுப்புவது நின்றுபோனது. அம்மா சுகவீனமுற்று இருப்பதாக அறிந்துகொண்டோம். அம்மாவை ஆஸ்பத்திரியில் கண்ணாடி அறையில் வைத்திருப்பதை அறிந்து அதிருந்து போனோம். அங்கு சிகிச்சையளிப்பதற்கு இலங்கை நாணயப்படி 15 லட்சம் கேட்டார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கிறது. இறுதியில் தொழிற் திணைக்களத்தை அணுகினோம். அவர்கள் அம்மாவை விசேடமாக இலங்கை கொணர உதவி செய்தார்கள்.

அம்மா இலங்கை கொணரப்பட்டதன் பின்னர் கேகாலை அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதித்து பரிசோதித்ததில் அம்மாவின் உடம்பு ஒரு வகையான விஷத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இப்போது அம்மாவால் எழும்பி நடக்க முடியாது, பேச முடியாது. தலையை மட்டும் தான் ஆட்டி கதைக்க முற்படுகிறார் என்று கண்ணீர் மல்க பத்திரிகையாளர்களின் தெரிவித்தார்.

தமிழில் - சரவணன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்