/* up Facebook

Aug 15, 2010

பெண் போராளிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க ஐ.நா அமைக்கும் புதிய குழு.


இலங்கைக்கு எதிராக நேரடி போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள எதிர்ப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில் அவற்றை பகுதிப்பகுதியாக விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக யுத்த காலத்தில் வடக்கில் பெண் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த கால பாலியல் வன்முறை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மார்கொட் வால்ட்ரோம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

யுத்த காலத்தின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது, சர்வதேச ரீதியாக நவீன யுகத்தில் முகம் கொடுக்கப்படுகின்ற பாரிய சாவால் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக இந்த சிக்கல் முகம்கொடுக்கப்படுவதாகவும் இது நிராகரிக்கப்படும் அளவுக்கு சிறிய பிரச்சினை ஒன்று இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாத ஒரு பாதுகாப்பு நடவடிக்கை, உண்மையான பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடையும் அல்லது ஓயும் தருணங்களில், நூற்றுக் கணக்கான பெண்கள் கருதரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் விசாரணை குழு அமைத்து சர்வதேச ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை கடந்த வருடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.

யுத்த காலத்தின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பின்னர் ஹிலாரி கிளிண்டன் தாம் வெளியிட்ட கருத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கம் ஹிலரி கிளின்டன் - பில்கிளின்டன் மற்றும் மோனிகா ஆகியோருக்கு இடையிலான பிரச்சினையை சுட்டிக்காட்டி, தமது உள்வீட்டு விவகாரங்களில் அவதானத்தை செலுத்துமாறு ஹிலாரி கிளின்டனுக்கு அறிவுரை வழங்கியது.
எனினும், பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தொடர்பிலான அறிக்கையிலும், யுத்த கால பாலியல் விடயங்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் தற்போது முறுகல்ந நிலை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு தனித்தனியான பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மிதமாக மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

நன்றி - தரவு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்