/* up Facebook

Aug 1, 2010

தானற்று தன்னை மீட்டு....! - மயு மனோ


ஏமாற்றிய மழையை
மழலையில் சபித்தபடியே
உறங்கி விட்டிருந்தாள்
குழந்தை கையில்
இன்னும் விழாதிருந்தது
காகித ஓடம்

தெரு கழுவிப் போன
சாம மழையுடன்
விழித்துக் கொண்டது
அவளின் குறுங் கனவு

மஞ்சள் கலந்ததான
நீல வானத்தின்
நிறப்பிரிகையில் ஜொலித்த
அந்தி வானம்
கரைந்து விட்டிருந்தது

வீதியோரம் எங்கும்
ஊதாப் பூக்கள்
புற்களில் பூத்திருந்தன
சீமெந்து நடை பாதை
பிளந்து மலர்ந்தும்
உதிர்வதாக இல்லை
சில பூக்கள்
அவை செவ்வந்தியை
ஒத்திருந்தன

எது குறித்தும்
ஆச்சரியப்படாது
நீர் சேர் குழி தேடி
கனவில் இருந்து
நனவுக்குள் விழுவதாகவும்
மீள் எழுவதாகவும்
போராடிக் கொண்டிருந்தாள்

ஓடத்தின் காகிதத்தில்
சில கவிதைகளும்
பல கனவுகளும்
தெளிவற்று
கிறுக்கப்பட்டிருந்தன

நாற் சந்தியின்
மையப்புள்ளி கொண்ட
மழை நீரில்
ஆடத் தொடங்கியிருந்தது
ஓடம்

ஒழுகிக் கொண்டிருந்தது
ஓட்டை வானம்
அவள் திரும்பி
மேகம் ஏந்தினாள்
கரு முகில்கள்
நிறமற்று துளியாகி
நிலத்தில் விழுந்தன
காணமல் போன
கறுப்பை இருட்டுக்குள்
தேடியபடியே
தூவானத்தை அள்ளி அள்ளி
மழையில் கரைந்தாள்

தலையிழந்த புற்களில்
இருந்த ரேகைகள்
யாருடையினதாகவும்
இனங்காணப்படவில்லை

நன்றி - நதியானவள்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்