/* up Facebook

Jun 11, 2010

ஒவ்வொரு பாடலாக……. ஒவ்வொரு கவிதையாக…… - தில்லை


இரத்தத்துடன் துளிர்க்கும் புற்களே….
எலும்புகளாய் எஞ்சிய மரங்களே…
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்.
ஒவ்வொரு பாடலாக……….
ஒவ்வொரு கவிதையாக…..

மண்ணோடு மண்ணாகிப் போன அடித்தளங்களே….
உடைந்து நொறுங்கிய சிதிலங்களே……
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்
ஒவ்வொரு பாடலாக…….
ஒவ்வொரு கவிதையாக…..

உயிரற்ற உடல்களையும் உடனிருந்தோரையும்
இறுக்கி அணைத்தபடி ஆழத்திலிருந்தெழும் அலையே
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்
ஒவ்வொரு பாடலாக….
ஒவ்வொரு கவிதையாக…….

புண்பட்டெரிந்த காடுகளே……
மரணத்தைத் தழுவிய விளைநிலங்களே
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்
ஒவ்வொரு பாடலாக……
ஒவ்வொரு கவிதையாக……..

வேர்கொண்ட வாழ்வைப் பிடுங்கி
முகாம்களில் பதுக்கி வைத்திருப்போரே
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்
ஒவ்வொரு பாடலாக………
ஒவ்வொரு கவிதையாக…..

எமது மண்ணில் புதைந்த துக்கங்களை
இரத்தத்தை தசையை எலும்புகளை சுமந்து
இங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்
ஒவ்வொரு பாடலாக….
ஒவ்வொரு கவிதையாக…..

நிரம்பி வழிந்த மரணங்களோடு
அனைத்தும் வீழ்த்தப்பட்ட நிலத்திலிருந்து
மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்போம்
ஒவ்வொரு பாடலாக…..
ஒவ்வொரு கவிதையாக……..

தில்லை 08062010

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்