/* up Facebook

Jun 8, 2010

தோற்றுப்போனவள் - தில்லை


நான் உயிர்த்தெழப்போவதில்லை
என் துக்கங்களால் புதையுண்டிருக்கிறேன்
கைவிடப்பட்ட இந்த வாழ்விலிருந்நு
எனது தாயைப் போல் நான்
தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை

தழும்புகளையும் இரத்தக் காயங்களையும்
இரகசியமாக என்னில் ஒளித்து வைத்திருக்கிறேன்
சிதைந்த என் யோனியைப் போல்…..

வெடித்துச் சிதறியெழும் மெளனத்தையும்
கண்ணீரையும் என்னிடம் கொடுத்தவர்களை தீண்ட
கோடரிப் பாம்பாக ஒற்றைச் சருகில்
ஒளிந்திருக்கும் எனது கவிதை


தில்லை 06062010

1 comments:

மணிமேகலா said...

/கோடரிப் பாம்பாக ஒற்றைச் சருகில் ஒளிந்திருக்கும் எனது கவிதை./

வீரியமான வீச்சு.

ஒரு துளி விஷத்தைப் போல உயிர் பறிக்கும் கோபம் அதில் அடங்கி இருக்கிறது.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்