/* up Facebook

Jun 10, 2010

ஆப்கன் சமரசம் பெண்ணுரிமைக்கு ஊறா? - BBC

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் சமரசங்கள் செய்துகொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதன் பிறகு கடந்த ஒன்பது வருட காலத்தில் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் தொடர்பில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என சில மனித உரிமை அமைப்புகள் அஞ்சுகின்றன.

குறிப்பாக அச்சமூகத்தில் முன்னேற்றம் கண்டுள்ள பெண்ணுரிமைகள் மழுங்கிப்போகலாம் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இப்போது வாய்ப்பு வசதிகள் பெருகியிருக்கின்றன. பெண்கள் வேலை பார்க்கலாம், பிற காரியங்களில் ஈடுபடலாம் என்ற ஒரு நம்பிக்கை தற்போது பிறந்திருக்கிறது.

ஆப்கானில் பெண்கள் கால்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்துள்ளனர். பெண்கள் தேசிய கால்பந்தாட்ட அணி ஒன்றும் உருவாகியுள்ளது.

குத்துச்சண்டைப் பயிற்சியில் ஆப்கானியப் பெண்கள்

ஆப்கானில் பெண்கள் சிலர் தற்போது ஆண்களிடம் இருந்து குத்துச் சண்டைப் பயிற்சி பெரும் அளவுக்கு சூழ்நிலை முன்னேறியுள்ளது. தாலிபான் ஆட்சிக்காலத்தில் இப்படி ஒன்றை கற்பனை செய்திருக்கவே முடியாது.

வரும் காலத்தில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, பெண்கள் தற்போது அனுபவிக்கத் துவங்கியுள்ள உரிமைகள் தாரை வார்க்கப்படலாம் என்று பெண்ணுரிமை குழுக்களிடையில் அச்சம் நிலவுகிறது.

ஆனால் காபூல் நகரத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஷுக்ரியா பாரக்ஸாய் அவ்வாறான அச்சம் தேவையில்லை என்கிறார். தாலிபான்களுடன் பேசுவதால் பெண்ணுரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று அவர் வாதிடுகிறார்.

நடக்கூடிய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் ஆண்களுக்கும் பெண்களுக்கு சம உரிமை வழங்குகின்ற அரசியல் சாசனத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டுத்தான் மேற்கொள்ளப்படும்.

ஆப்கானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி குறிப்பிடுகிறார்...
தாலிபான்கள் வீழ்ந்ததிலிருந்து ஆப்கானில் பெண்கள் சிலர் பெரிய அளவில் பலன் கண்டிருக்கிறார்கள், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள சுதந்திரங்களை அனுபவித்து மெச்சும் அவர்கள், அவற்றை இழக்கக்கூடாது என்பதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்.
BBC - 06 ஜூன், 2010

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்