/* up Facebook

May 19, 2010

நவீன திருத்தொண்டர்கள்... (மே நினைவாக) - தில்லை



மரணத்தைத் தழுவி அடங்கியது துப்பாக்கி
மீண்டும் உயிர்த்தெழ முடியாத மரணம்
ஒரு தலைவன்! ஆயிரமாயிரம் போராளிகளாம்…

எறிகணையாலும் பட்டினியாலும் பொசுக்கப்பட்ட
எண்ணற்ற மனிதர்களின் உள்ளொடுங்கிய உடல்கள்...

எங்கள் எல்லைகளையும் அடித்தளங்களையும்
கண்மூடித்தகர்த்தனர் கல்லாக உறைந்த
புத்தபகவான் தேசத்தினர்


குழந்தைகளின் உருக்குலைந்த உடல்களையும்
கரிக்கும் இரத்தத்தையும்
பெளர்ணமிப் படையலாகத் தந்த நவீன திருத்தொண்டர்கள்

சுதந்திர நிலத்தைத் தழுவித் தழுவி
அலைந்தழுத தாய்களையும்
இருப்பிடங்கள் பிடுங்கப்பட்ட சகோதரிகளையும்
எப்படி நான் மறப்பேன்.....

சாம்பலில் சந்ததியைத் தேடியலையும்
தாய்களின் குழந்தைகள்
எத்தனைமுறை அடிபணிந்தார்களோ மரணத்திற்காக………..

தில்லை 17052010

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்