/* up Facebook

Apr 28, 2010

பள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை


பரீட்சையில் உயர்கல்விக்கு தகைமை பெறாததால் இலங்கை கம்பொலை பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சஹானா என்கிற இந்த மாணவியின் வயது 17. இவர் ஒரு இரைட்டையர். இரட்டையரான இவரது சகோதரி பரீட்சையில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளார்.

இவரது பெற்றோர்கள் சஹானாவை எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவரவேண்டுமென்கிற கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் பெறுபேறுகள் வந்தவுடன் வீட்டில் நிகழ்நத விவாதத்தினால் நொடிந்ததபோன சஹானா தற்கொலைசெய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். பெற்றோர் வீட்டிலிருந்து வெளியேறிய வேளையில் அறைக்கதவுகளை மூடிவிட்டு தன்மிது தீயிட்டு கொழுத்திக்கொண்டுள்ளார்.  விட்டிலிருந்து நெருப்பு வருவதைக் கண்ட அயலவர்கள் பூட்டிய கதவை திறக்க முடியாத நிலையில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது சஹானா தீயெறிந்தவேளை அமர்ந்தபடி இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துள்ளார்.

இலங்கையில் பரீட்சையில் உயர்கல்விக்கு தேற்றாத மாணவர்கள் தோல்வியுற்றதாக கருதப்படும் கருத்து சமூகத்தில் நிலைபெற்றுள்ளது. இதன் விளைவாக விரக்திக்குள்ளாகி தற்கொலைசெய்துகொள்ளும் மாணவர்கள் பற்றிய செய்திகள் ஒவ்வொரு தடவையும் செய்திகளாகின்றன. உலகத்தில் தற்கொலைசெய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடாக ஏற்கெனவே இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதல்தோல்வி மற்றும் பரீட்சை "தோல்வி" என்கிற காரணகளும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வறுமையின் காரணமாகவும் தற்கொலை செய்துகொள்பவகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவை. இவர்களில் பெறும்பாலானோர் பெண்களாவர்.

2 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

சஹானா இரட்டையரல்ல. இவருடன் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மற்ற மாணவி இவரது உடன்பிறந்த சகோதரியல்ல. சித்தி மகள்.

இவர் தீவைத்துக் கொண்டது வீட்டிலல்ல. புதிதாகக் கட்டப்பட்ட மலசலகூடத்துக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டே தீவைத்துக் கொண்டார். மலசலகூடத்திலிருந்து புகை வருவதைக் கண்டே அயலவர்கள் இவரை வெளியே எடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர்.

shibly said...

This is a sad story..But,There are so many ways available to build our career without Advance Level qualifications.So,Parents should think about the alternatives.Dont force children and dont compare with other students.

Please,Think twice and save our next generation.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்