உடலுடன் தொங்கும் உணர்வுகளின் பெருவலி
அரவணைக்க விருப்பமின்றி
தனித்த வார்த்தைகளால் மோதவிடுகிறேன்
வெற்றிகளை அலங்கரித்த போராளிகள்
துடைத்தெறிய முடியாத மரணங்கள்
கசிந்துருகும் கண்ணீர் என
எழுந்தெழுந்து விழும் கடந்த காலம்
போர் நேற்றுவரை பெருமைகொள்ளப்பட்டது
சந்தோசமாகத்தானிருந்தது
ஆளாளுக்கு ஆயிரமாயிரம் கோரிக்கைகள்
எல்லாக் கோரிக்கைகளும்
தனித்த வார்த்தைகளாய்
மீண்டும் தேர்தல்…..
பெருமை கொள்வதற்கு என்ன இருக்கிறது?
நேற்றுவரை திகிலூட்டிய
அதே மனிதர்கள்.....
24012010


0 comments:
Post a Comment