/* up Facebook

Jan 2, 2010

கனவுகளால் விரியும் உடலுக்கான மொழி -தில்லை




உணர்வுகளின் திமிர்
அந்தரங்கங்களால் புனைவுகொள்ளும்
அடர்ந்த வரிகளில் மறைந்தலைந்து
மீண்டும் மீண்டும்
உயிர்த்திருக்கும்.

இரக்கமற்ற பிரியங்களில்
எல்லாமும் வேடிக்கையாகிப் போன
வாழ்வையெண்ணி
மறுபடி மறுபடி
உணர்வுகள் துளிர்விடும்

மனிதரைப்போல் என்முன் அமர்ந்து
இழுத்தணைக்கும் வரிகளை
கொஞ்சங் கொஞ்சமாக
நிராகரித்து உருவழிக்கும்
எனது இருப்பு.

நெஞ்ச கனவு கலைத்து
புனைவுகளைக் கட்டுடைத்து
வரிகளைப் புணர்ந்து
உடலின் மொழியை அதிசயிக்க
உயித்தெழும் எனது கவிதை.

01012010

1 comments:

Pathmakandee said...

அன்புச் சிநேகிதியே,

ஆர்பரிக்கும் உனது உணர்வான வரிகள் என்னையும் தாக்குகிறது, உன்னை தெரிந்தவன் என்பதால்.
வட்டத்துக்குள் இல்லை என்று நீ உரக்கசொனாலும், கொஞ்சம் வெளியே வா என்று அழைக்கின்றேன் உன்னை

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்