/* up Facebook

Dec 21, 2009

பொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்திரவதைகள் இடம் பெற்றுள்ளன!

வழக்கறிஞர் சாமனி குணரட்ண
(வீடியோ இணைப்பு)





தம்மை யார் சித்திரவதைக்கு உட்படுத்துகிறார்களோ அவர்கள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைக்கிறார்கள் என்பது சித்திரவதைக்கு உள்ளாகுவோருக்கோ அல்லது சாதாரண பொது மக்களுக்கோ தெரியாது. அவ்வாறு அறியாதிருப்பது அவர்களது குற்றமல்ல. அம்மக்களுக்கு இது தொடர்பான அறிவூட்டலை மேற்கொள்ளாமலிருப்பதில் தான் தவறு இருக்கிறது என்றார் சட்டத்தரணி சாமனி குணரட்ண.


சிவில் சமூகக் குழுக்கள் ஒழுங்கு செய்திருந்த இலங்கையில் சித்திரவதைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சட்டத்தின் அடிப்படைகள் பற்றிக் கூட அவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை. சட்டக்கல்வி வழங்கப்படுவது பல்கலைக்கழகங்களிலும் சட்ட நிறுவனங்களிலும் தான். சாதாரண மக்களுக்கல்ல.


பொலிஸ் குற்றப்புலனாய்வு மற்றும் இராணுவ தடுப்பு மையங்களில் தான் பெருமளவு சித்தரவதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இது தவிர குடும்பங்களுள்ளும் சித்திரவதை இடம் பெற்றிருக்கிறது. எவ்வாறெனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சித்திரவதை தொடர்பான தகவல்கள் வெளிவருவதில்லை.


சித்திரவதை தவறானது. நிறுத்தப்பட வேண்டும் என்ற உணர்வும் அறிவும் மக்களிடம் வளர்க்கப்படல் வேண்டும்.


பயங்கரவாதம் இருக்கின்றது. இந்நிலையில் நாம் சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றோ அல்லது சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்தோ பேச முடியாது என்பதை என்னால் ஏற்க முடியாது. அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு பிரஜைக்கும் சட்டத்தின் பாதுகாப்பு இருக்கிறது. எனவே போரின் போதோ அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதோ சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த முடியாது என எவராவது சொல்வதை என்னால் ஏற்க முடியாது.


புள்ளிவிபரங்களின்படி 80 வீதமான சித்திரவதைகள் சாதாரண மக்கள் அதுவும் பெண்கள் மேலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சித்திரவதைகள் இவ்வாறு பல்கிப் பெருகுவது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறப்பானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி மனிதன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்