/* up Facebook

Dec 20, 2009

மரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை




துயரங்கள் நிறைந்த பனிக்குளிரில்
தெளிவற்றுத் தெரியும் பனிபடர்ந்த பாதைகள்


நடு நடுங்கும் விரல்களை இறுக பொத்தியபடி
நெருக்கமாய் பின்தொடரும் நேற்றைய நினைவுகள்


அவர்களையும் உன்னையும் கிளர்ச்சியூட்டிய
எனது உதடுகளில் எந்த உணர்ச்சியுமில்லை


அழிக்கப்பட்ட எண்ணற்ற உடல்களும்
ஆக்கிரமிக்கப்பட்ட செழிப்புற்ற நிலங்களும்
இன்னும் இன்னும் எல்லாமுமாய்
துயரும் வலியும் எம்மைச் சூழ்கிறது


மரணத்தை நினைவுறுத்தும் கண்ணீரும்
வாழ்தலுக்காய் காத்திருக்கும் மனிதர்களுமாய்
எஞ்சியிருக்கிறது இன்னுமொரு கவிதை


16122009

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்