/* up Facebook

Dec 10, 2009

குருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை




யுத்தம் வீசியெறிந்த
மரணங்களில்
இரத்தமும் சதையுமாய்
இருந்தது விடுதலை


உறக்கமற்றிருந்த
பயங்கர நாட்களில்
உயிர்த்தெழ முடியாத
மரணத்தைத் தழுவி
அடங்கியது இரவு


புண்பட்ட வாழ்விடங்களில்
கடைசிக் குடிசை வரை
நிரம்பி வழிந்த மரணங்களை
ஒளித்து வைத்தது அழுகை


உயிர்களைக் கொல்பவர்களின்
கொடிய நகரங்களில்
அச்சம்தரும் விசேட முகாம்களில்
சிறைப்பட்டவர்களுக்காக
துயருறும் எனது கவிதை




* (மேற்படி புகைப்படத்தின் வாசகங்கள் ஷமில இந்திக எனும் சிங்கள கவிஞரால் எழுதி வடிவமைக்கப்பட்டது. அவருக்கு நன்றி)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்