/* up Facebook

Nov 17, 2009

ஒரு துயரத்தின் நீள்கோடு - தில்லை





எனது சில
கவிதைகளைப் போலும்
கனவுகளைப் போலும்
வக்கிரம் நிறைந்தது
பழுப்பு நிறத்திலான
உரோமங்கள் மொய்த்த
ஆண்குறி.


வக்கிரங்கள் நிறைந்த
இரகசிய அறைகளில்
கழுவேற்றப்பட்ட
என் தலைமுறைகளின்
அபாய அழுகுரல்.


வெற்றுப் பாய்களில்
அசைவற்று உறைந்து போன
விந்திலிருந்து
ஒன்று இரண்டு……..நூறு என
குரூரமாய் முளைக்கிறது யோனி.

எனது சில
கவிதைகளைப் போலும்
கனவுகளைப் போலும்
விநோத நினைவு
யோனிகளுக்கு
கோரைப் பற்கள்
முளைத்திருப்பதாய்

22112008

1 comments:

sunthari said...

இவ்வாறான கவிதைகளில் தனிமனித விரக்தி மேலோங்கியிருக்கின்றது தவிர பெண்ணிய ஒடுக்குமுறையின் நிதானமான வெளிப்பாடு பின்தங்கியே நிற்கின்றது. இது பெண் ஒடுக்குமுறை குறித்த ஒரு தவறான புரிதலுக்கே வழிவகை செய்கின்றது.

சில பெண்ணியவாதிகள் யோனி குறி போன்ற பதங்களை பயன்படுத்துவதும் அதன் மீது விகாரத்தை (உதாரணமாக கோரப்பற்கள் முளைத்த யோனி) திணிப்பதும் ஒரு மிகமோசமான எதிர்மறைப்பக்கத்திற்கு கருத்தை இட்டுச் செல்கின்றது.

பெண்ணியம் என்பதும் பெண்விடுதலை என்பதும் சமூக விடுதலையில் இருந்து பிரிந்து தனித்த ஒன்றல்ல. உதாரணமாக வரதட்சணைக்கொடுமை என்பதற்கு காரணமாக இருப்பதில் ஆணைப் பெற்ற தாயார் 50 வீத காரணமாகின்றார் இதில் பலியிடப்படுவதும் ஒரு பெண்ணே. மதசம்பிராதாயங்கள் கலாச்சாரங்கள் போன்ற பல விடயங்களில் இது தனது மூலத்தை கொண்டுள்ளது. இதற்கான விடுதலை என்பதுக்குரிய போராட்டம் அங்கே ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.

இன்றய மிருகத்தனமான புணர்ச்சி முறைகள் அதனால் பாதிக்கப்படும் பெண்கள் விவகாரத்து பாலியல் கொடுமைகள் போன்ற பலவற்றுக்கான விதைகள் இயந்திர உலகத்தின் பல்வேறு மூலங்களில் இருந்து விதைக்கப்படுகின்றது. அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் இன்பத்தை பெற்றுவிட்டு அவளை ஒருவன் சுட்டுக்கொல்கின்றான். அதற்கான அவனுடைய உந்துசக்தி வன்முறை நிறைந்த வீடியோ கேம் களில் இருந்து வந்தது பின்னர் அறியப்படுகின்றது. இவ்வாறான பிரச்சனைகளுக்கு ஆணாதிக்கத்தை காரணம் கற்பித்து தீர்வுகாணமுடியாது.

இவ்வாறு நான் எழுதுவதற்கு காரணம் பெண்ணியம் பெண் விடுதலை என்பது சமூக விடுதலை இன விடுதலை முதலாளிய அமைப்பு நெருக்கடிகளில் இருந்து விடுதலை மத கலாச்சார ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை போன்ற பல விடயங்களில் சம்மந்தப்பட்ட ஒரு ஆழமான விடயம். யோனி குறி என்று தனிமனித விரக்திகளின் ஊடாக இதற்கான தீர்வை எட்ட முடியாது. அதே நேம் பாதிப்புகளை உணர்வுபூர்வமாக எழுதுவது அவசியம்.

ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அழுவது பிரச்சனைக்குத் தீர்வு இல்லை. ஆத்திரப்படுவதும் தீர்வு இல்லை. இரண்டையும் கடந்து நிதானமாக தீர்வுக்குரிய வழியை தேடுவதே பிரச்னைகளில் இருந்து தீர்வை பெற வழிசமைக்கும். இந்தக்கவிதை அழுகின்றது ஆத்திரப்படுகின்றது. தவறில்லை ஆனால் தீர்வு குறித்து முட்டுச்சந்தில் நிற்கின்றது.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்