/* up Facebook

Nov 2, 2009

பொட்டை முடிச்சு - தில்லை




நூற்றாண்டின் இரவுகளை
முடிச்சவிழ்க்கிறேன்
இத்தும் புரிபிஞ்சும்
அசவின் கயிறுகள்.

உயிரின் சுவைகொண்ட
இரத்தத்தை நக்கியும்
கொடுவலிகளைக்
குடித்தும் பாய்கள்.

விந்தூறி நனைந்தும்
சாயம் வெழுத்தும்
எனது தலைமுறைகளின்
அசவு.

இறுகியும் இறுக்கியும்
பொட்டைமுடிச்சு.

தகப்பன்கள்
கணவன்கள்
மகன்கள்
தலைமுறைகளின் ஆதிக்கம்...

எனது தாய் தனது
சேலைத்தலைப்பில்
முடிந்துவைத்திருக்கும்
சில்லறைகளாய்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்