/* up Facebook

Nov 1, 2009

படுவான்கரை - தில்லை


எண்ட கிராமத்து ஊடும்
நல்ல தண்ணிக்கிணறும்
கரையாக்கன் கம்பு வரிச்சுவேலியும்
வடிவு எண்டா ஒரு வடிவு
அகன்று விரிஞ்ச வயல் வரம்பும்
மரங்களடர்ந்த கிராமத்துவேலியும்
பெரியகுளமும் நீண்டவாய்க்காலும்
வடிவெண்டா என்னொரு வடிவு
மேகம் அப்பியசூரியனின் கருக்கல் பொழுதுகளில்
பரந்தவெளிதிரிந்த மாடுகன்றென எல்லாமும்
எண்ட ஊர் திரும்பிய காலமொன்று...
எழுவானில் பொழுது கிளம்பக்க
காற்றாடியில் பறந்த பதக்கடையாய்
எழுவான்கரை போன எண்ட உறவுகள் எங்க?
மழைக்கும் மாடொதுங்கா மரத்தடிலயும்
பரமமாமன் பாம்கோழி வளர்த்த காலைக்குள்ளயும்|
என்ன சீரழிவும் சிறுமானியமும் மகளே!!!
என்ட சின்னம்ம என்னமா அழுகிறா?
வட்டி சேவரக்கால் வட்டா செம்பு...
தாய்தகப்பன் முதுசமெல்லாம்
சாக்குச்சாக்கா அள்ளுறானாம்...?
எம்பி அழுகிறாவாம் என்றான் ஒரு சொந்தக்காரன்?
வெங்கலம் என்ன வெங்கலம்...?
எங்கட நிலபுலங்கள் எல்லாம் என்ன
அவன் நிமிர்த்தியா தூக்கப்போறான்?
சின்னப்பன் சொல்லுறாரு
ஊட்ட போக உட்டாக் காணும்!!!
கஞ்சித்தண்ணி எண்டாலும்...
கவுரவமா குடிப்பம் புள்ள...
வந்தான் வரத்தான் எல்லாம் வடிவழகு பார்ப்பதற்கு
குறளி வித்தக் காறன் போல
டவுணுல குந்திருக்க ஒண்ணா புள்ள?




(குறிப்பு ;- குடும்பிமலையும் படுவான்கரை இடப்பெயர்வும்)
Sep 2008

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்