/* up Facebook

Nov 1, 2009

தலைப்பிலிக் கவிதை - தில்லை



எனக்கு முன்னே
என்னுடைய அம்மா
அவளின் அம்மா... அத்தனை
இலகுவானவர்களாக இருந்திருக்கவில்லை.
நான் ஒரு போராளி!

சாக்கடைநீராய்உருகிக்
கரைந்து போன தாய்களின் மகள் நான்.
அடுப்படி இறவானங்களில்
சொருகி இருந்த வரலாறுகளும்
சேலைத்தலைப்புகளில்
முடிந்திருந்த சரித்திரங்களும்
எனக்குச் சீருடை தந்தது.

எனது தாய்களின் குரல்வளைகளை
அழுத்தி இறுக்கிய கோபமும் துயரமும்
என்னிடம் யுத்தத்தைத் திணித்தது.
நான் ஒரு போராளி!

கலாச்சார அடக்குமுறையிலிருந்தும்
பாலியல் வன்முறையிலிருந்தும்
நான்
விடுதலை பெறவேண்டும்.
மீறல்களை மீண்டும் உரையாடிக் கொண்டே...
நான் போராட வேண்டும்.
நான் ஒரு போராளி!

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்