/* up Facebook

Nov 1, 2009

கலட்டிக்காய் - தில்லை


புரிந்து கொள்ள முடியாததின்
மீது உயிர் உறைவதும்
கரைவதுமாய்
ஒடுங்கி ஒடுங்கி
நீள மறுக்கிறது மனது
மிக மிக இரகசியமான
உணர்வுகளின் மீது
சுவாரசியமான நிறங்கள்....
தோன்றுவதும் மறைவதுமாய்
கழிகிறது பொழுது
சில வருடங்களுக்கு முன்பான
காலங்களில் ஒருநாள்
அவாவித் தழுவிய இருளின்
கைகள் முன் நகர்ந்து
முலைகளை அழைந்தும்
யோனியை பொருதியும்
நீ கன்னியா.....?
என்றுணர்ந்து
மீண்டும் மீண்டுமாய்...
வருடங்கள் கடந்தும்
நற்பண்புள்ள உயர் கல்விகற்ற
உயர் பதவி வகிக்கும்
அழகிய சிவந்த படித்த மணமகள்
புதிய புதிய .....
மீண்டும் மீண்டுமாய்....
எப்படி இருக்கிறாய்...?
மழைபெய்து ஓய்த
ஒருநடு இரவில்
தெரு ஓரத்தில் இருக்கும்
இலைகளற்ற மரங்களை
நினைவு கொள்ளச் செய்கிறது வாழ்வு

1 comments:

கவிதை(கள்) said...

நிதர்சன வலி

வாழ்த்துக்கள்

விஜய்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்