/* up Facebook

Nov 1, 2009

ஒரு காதலும் இரண்டு குளிசைகளும் - தில்லை


தடயங்களை மறைத்தும்
காதலையும் அதன் உயிர்ப்பையும்
அழித்தும் விட்டேன்
கூட்டத்தோடும் தனித்தும்
எனது தாய்
மறைத்ததையும்
எனது சகோதரி
அழித்ததையும்
நானும் செய்கிறேன்
யூதர்களின்
கடவுள் வாழ்த்துப் பாடலும்
இரண்டாவதாக நன்றி சொல்லும்
பிளாட்டோவின்
கடவுள் வாழ்த்துப் பாடலும்
சரி என்கிறேன்
வரலாற்றின் தடங்களில்
தாய் மறைத்ததையும்
சகோதரி அழித்ததையும்
நானும் செய்தேன்
தயவு செய்து
நான் இறந்த பின்
என் யோனியைத் திறந்து வையுங்கள்!
அவர்கள் சொல்வார்கள் கடைசியாக
என் கவிதைக்கு என்ன மதிப்பு என்று!

2 comments:

kamalesh said...

நிறைய விசயங்களை பேசுகிறது உங்கள் கவிதயின் வரிகள்..
உங்களின் எழுது பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்..

கலையரசன் said...

வீரிய வார்த்தைகள்...

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்