/* up Facebook

Nov 1, 2009

இன்னுமொரு யோனி செய்வோம் - தில்லை


அர்த்தம் அள்ளி
வரிகளை விழுங்கினேன்
வானமும் பூமியும்
வயிறு நிரம்பிற்று
காற்றை உள்ளங்கையில் நக்கி
கடலை குடித்தேன் சிரட்டையில்
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று
தெரிந்தவன்
சிட்டுக்குவி
மலவாசல்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை இறுகி
 இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்
இரத்தம் வழிய

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்